23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' – விவரித்த கர்னல் சோபியா குரேஷி

Date:

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்.

“பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்காக அவர்கள் டிரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்தியா அந்த அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக தகர்த்துவிட்டது.

ஆனால், நேற்று இரவு பாகிஸ்தான் வான்வழியாக 26 இடங்களில் ஊடுருவ முயற்சித்தது. அவர்கள் உதம்பூர், புஜ், பதான்கோட், பதிண்டாவில் உள்ள நமது விமானப்படை தளங்களையும், நமது ஆயுதங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

நேரலை

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது மட்டுமே..!

பஞ்சாப் விமானப்படை தளங்களில் காலை 1.40 மணிக்கு உயர் வேக ஏவுகணை மூலம் குறிவைத்தனர். அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றையும் தாக்கியுள்ளனர். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவத்தின் மீது மட்டுமே இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது.

இந்தியா தாக்குதல் நடத்தும் போது குறைந்த அளவு சேதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்தியா கவனமாக உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தினாலும், இந்தப் பதற்ற நிலையை குறைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പത്ത് വര്‍ഷമായി നരകത്തില്‍, ലീഗില്‍ അംഗത്വമെടുത്തപ്പോള്‍ സ്വര്‍ഗത്തിലേക്ക് അടുത്തു; തിരിച്ചുവരവില്‍ കാരാട്ട് റസാഖ്

കോഴിക്കോട്: ഇടതുപാളയം വിട്ട് വീണ്ട് മുസ്‌ലിം ലീഗിലേക്ക് ചേക്കേറിയതിന് പിന്നാലെ സി.പി.ഐ.എമ്മിനെതിരെ...

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை...

Iran War : అణుముప్పు అంచున మధ్యప్రాచ్యం.. ప్రపంచ ఆరోగ్య సంస్థ తీవ్ర ఆందోళన.!

మధ్యప్రాచ్యంలో యుద్ధం అత్యంత భయంకరమైన , ప్రమాదకరమైన దశకు చేరుకుందని ప్రపంచ...

സാദിഖലി തങ്ങള്‍ക്കെതിരായ ആരോപണം; പരാതി നല്‍കി ലീഗ്, വ്യാജപ്രചാരണങ്ങളില്‍ വഞ്ചിതരാകരുതെന്ന് കുഞ്ഞാലിക്കുട്ടി

കോഴിക്കോട്: മുസ്‌ലിം ലീഗ് അധ്യക്ഷന്‍ സാദിഖലി ശിഹാബ് തങ്ങള്‍ക്കെതിരെ ഉയര്‍ന്ന ആരോപണത്തില്‍...