26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

போர் பதற்றம், வான்வழி மூடல்… Air India நிறுவனத்தின் செலவீனங்கள் ரூ.5000 கோடி அதிகரிப்பு?

Date:

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் பெறும் நட்டத்தைச் சந்திக்க நேரிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ராய்டர்ஸ் தளம் தெரிவிக்கும் கருத்தின்படி, பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க முடியாததால் Air India நிறுவனத்தின் செலவீனங்கள் வழக்கத்தை விட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Air India

இந்த தடை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இந்த செலவீனங்கள் இன்னும் உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த வான்வழி தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 5000 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ரீதியிலான தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளால் இருநாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

Pakistan India
Pakistan India

இந்த தடைகள் எத்தனை நாட்கள் நீடித்திருக்கும் என்பது ராஜாந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே தெரியவரும். மே 23ம் தேதி இவை முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இழப்புகளைச் சந்தித்தாலும், சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் இருநாட்டு வான் தடத்திலும் பறக்க எந்த தடையும் இல்லை என்பதனால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை சரியானபிறகு மானியங்களைத் திரும்பப் பெறுமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பிலோ, ஏர் இந்தியா தரப்பிலோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Punjab Kings: ఈ సారి ఎలాగైనా ట్రోఫీ గెలవాల్సిందే.. స్పెషల్ పూజలు చేసిన ‘పంజాబ్ కింగ్స్’ టీం..!

Punjab Kings: ఈ సారి ఎలాగైనా ట్రోఫీని గెలవాల్సిందే అన్నట్లుగా పంజాబ్...

ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದ್ರೆ ಮುಂದೆಯೂ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,25,2026 (www.justkannada.in):  ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದರೇ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ ಎಂದು...

കേരളത്തില്‍ സി.ജെ.പി സഖ്യം; ബി.ജെ.പിക്ക് നല്‍കുന്ന വോട്ട് എല്‍.ഡി.എഫിന് നല്‍കുന്നതിന് തുല്യം: ഖാര്‍ഗെ

കോഴിക്കോട്: കേരളത്തില്‍ ഇടതുപക്ഷവും ബി.ജെ.പിയുമായി സി.ജെ.പി സഖ്യമാണെന്നും, ബി.ജെ.പി മത്സരിക്കുന്നത് എല്‍.ഡി.എഫിന്റെ...

எம்.ஜி.ஆருக்கு முன் தமிழக சட்டமன்றம் சென்ற முதல் நடிகர்; யார் தெரியுமா?

திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு...