10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

`திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்' – மு.க.ஸ்டாலின் அதிரடி

Date:

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை அவர் வகித்த கட்சி பதவியில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமை கழகம்.

பொன்முடி பேசியது என்ன?

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ வைரல் ஆனது. பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோ வேகமாக பரவ, பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கண்டனம்

கனிமொழியின் பதிவு

பொன்முடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ‘ஓசி டிக்கெட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இவரது சர்ச்சை பேச்சுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பொன்முடியை கழக துணைப் பொதுச்செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமைக் கழகம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Mamidalapalli: మరణంలోనూ విడతీయని బంధం.. భర్త మరణించాడని భార్య కూడా..!

Mamidalapalli: భర్త మరణం తట్టుకోలేక ఆత్మహత్య చేసుకుంది ఓ భార్య. వృద్దాప్యంలో...

ಎರಡು ತಿಂಗಳಲ್ಲಿ ಹಲವು ಪ್ರಕರಣ ಭೇದಿಸಿದ ಮೈಸೂರು ಪೊಲೀಸರು: ನಗದು ಚಿನ್ನಾಭರಣ ವಶಕ್ಕೆ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,9,2026 (www.justkannada.in):  ಮೈಸೂರು ಜಿಲ್ಲಾ ಪೊಲೀಸರು ಎರಡು ತಿಂಗಳಲ್ಲಿ ಕಾರ್ಯಾಚರಣೆ...

ദല്‍ഹി കലാപക്കേസ്; ഷര്‍ജീല്‍ ഇമാമിന് ഇടക്കാല ജാമ്യം

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹി കലാപ ഗൂഢാലോചനക്കേസില്‍ ഷര്‍ജീല്‍ ഇമാമിന് ഇടക്കാല ജാമ്യം. സഹോദരന്റെ...

போர்களில் கொல்லப்படும் குழந்தைகள்… உறங்குகிறதா உலகின் மனசாட்சி?

உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும் குழந்தைகளுக்கு எதிரான போர்தான். தற்போது அமெரிக்காவும்...