16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

'திமுக இப்படி ஏமாத்துவாங்கனு தெரியாம போயிருச்சே!'- மகளிர் தினத்தில் விஜய்யின் நேரடி அட்டாக்!

Date:

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் பாதுகாப்புப் பற்றி பேசும் விஜய், திமுக அரசையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

tvk vijay

விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ‘எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுக்க இருக்கும் என்னுடை அம்மா, அக்கா, தங்கை, தோழி அத்தனை பேருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தோஷம்தானே…பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷத்தை உணர முடியும்? இப்படி எந்த பாதுகாப்பு இல்லாமல் அச்ச உணர்வோடு இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே? அப்படினு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய?

நீங்க நாம எல்லாம் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா, அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்பதானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியதுதான். கவலைப்படாதீர்கள். 2026 இல் நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்ற வேண்டும். அதற்காக இந்த மகளிர் தினத்தின் உறுதியேற்போம்.

TVK Vijay

எந்த சூழ்நிலையிலுல் ஒரு தம்பியாக, அண்ணனாக, மகனாக, தோழனாக உங்களுடன் நிற்பேன். நன்றி.’ எனக்

கூறியிருக்கிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சித்ததே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக திமுக என குறிப்பிட்டு வெளிப்படையாக அட்டாக் செய்திருக்கிறார். அதுபோக இன்றைக்கும் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மா.செக்களுக்கு உத்தரவும் இட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Nepali Gang : అన్నం పెట్టిన ఇంటికే కన్నం వేశారు..

హైదరాబాద్‌లో నేపాలీ గ్యాంగ్ మరోసారి రెచ్చిపోయింది. జస్ట్ ఇంట్లో పని మనుషులుగా...

ಮೊಬೈಲ್ ಕ್ಯಾಂಟಿನ್ ಗೆ ಸಹಾಯಧನ: ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಲು ಅವಧಿ ವಿಸ್ತರಣೆ

ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ, ಮಾರ್ಚ್,16,2026 (www.justkannada.in): ಪ್ರವಾಸೋದ್ಯಮ ಇಲಾಖೆ ವತಿಯಿಂದ ಎಸ್.ಸಿ.ಎಸ್.ಪಿ/ಟಿ.ಎಸ್.ಪಿ...

സി.പി.ഐ.എം വിട്ട് ടി.കെ. ഗോവിന്ദന്‍; തളിപ്പറമ്പില്‍ പി.കെ. ശ്യാമളക്കെതിരെ മത്സരിക്കും

കണ്ണൂര്‍: സ്ഥാനാര്‍ത്ഥി പ്രഖ്യാപനത്തിന് പിന്നാലെ പാര്‍ട്ടി വിട്ട് കണ്ണൂരിലെ മുതിര്‍ന്ന സി.പി.ഐ.എം...

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான...