15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் – யார் இந்த Kash Patel?

Date:

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்திருந்தார். அந்தவகையில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.

காஷ் படேல்

FBI-யின் இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்துள்ளது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பதவியேற்புக்குப் பின்னர் பேசிய காஷ் படேல், “உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள்.

FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன்.” என்று கூறியிருக்கிறார். குறிப்பாக பதவியேற்பு விழாவில் காஷ் படேல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

காஷ் படேல்

யார் இந்த காஷ் படேல்?

குஜராத்தைச் சேர்ந்த காஷ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2004-ம் ஆண்டில் சட்ட படிப்பை நிறைவு செய்த காஷ் படேல் அரசு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்க நீதித் துறையில் படேல் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க உளவு விவகார கமிட்டியின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்காக அவர் கடினமாக உழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பலனாக தற்போது எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸರ್ಕಾರಿ ವೈದ್ಯಕೀಯ ಕಾಲೇಜಿಗೆ ಅಡಿಗಲ್ಲು: ಹೆಚ್.ವೈ.ಮೇಟಿ ಕನಸು ನನಸು-ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬಾಗಲಕೋಟೆ, ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in):  ದಿವಂಗತ ಹೆಚ್.ವೈ.ಮೇಟಿಯವರ ಪ್ರಯತ್ನ ಮತ್ತು  ಆಶಯದಂತೆ ...

ആരാണ് അവസരവാദി? ഓപ്ഷനില്‍ പണ്ഡിറ്റും; യു.പി പൊലീസ് റിക്രൂട്ട്‌മെന്റ് പരീക്ഷയിലെ ചോദ്യം വിവാദത്തില്‍; കര്‍ശന നടപടിയെന്ന് സര്‍ക്കാര്‍

ലഖ്‌നൗ: ശനിയാഴ്ച യു.പിയില്‍ നടന്ന പൊലീസ് സബ് ഇന്‍സ്‌പെക്ടര്‍ തസ്തികയിലേക്കുള്ള റിക്രൂട്ട്‌മെന്റ്...

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" – ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில்...

Maharaja 2 : మహారాజ సీక్వెల్ కథ రెడీ.. షూటింగ్ కోసం ఈగర్లీ వెయిటింగ్ : విజయ్ సేతుపతి

తమిళ స్టార్ హీరో విజయ్ సేతుపతి కెరీర్‌లో 50వ మైలురాయిగా నిలిచిన...