10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

Periyar: "ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” – நாதக மு.களஞ்சியம்

Date:

பெரியார் மீதான சீமானின் ஆதாரமற்ற விமர்சனங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. இச்சூழலில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியத்தைச் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சவால்கள் குறித்துக் கேட்டேன்.

“பெரியாரை இப்படித் தாறுமாறாக விமர்சித்தால் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்களே?”

“நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் வராது. ஈரோடு கிழக்கு பிரசாரக் களத்திலும் பெரியார்மீதான எங்கள் விமர்சனத்தை இன்னும் கூர்மையாகவும் கடுமையாகவும் முன்வைக்கப் போகிறோம். நான் சவால் விடுகிறேன். பெரியாரின் பிள்ளைகளாகிய தி.மு.க-வினர் மக்களைப் பட்டியில் அடைக்காமல், வாக்குக்குக் காசு கொடுக்காமல் பெரியார் பேசிய கருத்துகளை அப்படியே பேசி தேர்தலைச் சந்திப்பார்களா? பெரியாரை எதிர்த்தால் வாக்களிக்கிறார்கள்.. பெரியார் சொன்னதைச் சொன்னால் வாக்களிக்கிறார்களா என இந்த தேர்தலில் பார்த்துவிடுவோம். 2023-ல் நடந்த கிழக்கு இடைத்தேர்தலில், 10,800 வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. அதைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலே பெரியார் தோற்றுப் போய்விட்டார், திராவிடம் செத்துவிட்டது என்றுதான் அர்த்தம்”

பெரியார்

“அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் களத்தில் இல்லாததால் அவர்களின் வாக்குகள் எளிதாகக் கிடைத்துவிடும் எனக் கணக்குப் போடுகிறீர்களா?”

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்தபோதும் வழக்கமாக நாங்கள் பெறும் விழுக்காட்டையே பெற்றோம். ஆகையால் மற்ற கட்சிகள் புறக்கணிப்பதால் அவர்களின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள். மாறாக நா.த.க முன்வைக்கும் கருத்தியலை ஏற்று, தூய அரசியலை விரும்புவோர் எங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள். பாசிச தி.மு.க-வை எதிர்த்துப் போரிடும் ஒரே துணிச்சல் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே இருக்கிறதென்பதை மக்கள் உணர்வார்கள்”

சீமான்

“ஆதாரமில்லாத அவதூறை சீமான் பரப்புவதாகக் கூறி பெரியாரிய அமைப்புகள் சீமானின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?”

“எதற்காகப் பெரியாரின் எழுத்துகளை நாட்டுடைமையாக்காமல் வைத்திருக்கிறார்கள். கருணாநிதியின் எழுத்துகளை நாட்டுடைமையாக்கும்போது பெரியார் எழுத்துகளை ஆக்காதது ஏன் என்ற கேள்விக்கு முதலில் திராவிட கும்பல் பதிலளிக்கட்டும். அண்ணன் சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாகச் சொல்கிறார்களே.. ஆம்ஸ்ட்ராங் கொலை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பரந்தூர் போராட்டம், டங்ஸ்டன் போராட்டம் மற்றும் வேங்கைவயல் என எந்த மக்கள் பிரச்னைகளுக்கு என்றாவது முற்றுகைப் போராட்டம் செய்தார்களா?

சீமான்
சீமான்

வன்முறை நோக்குடன் நடத்தத் திட்டமிடப்படும் அந்த முற்றுகை போராட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. நாங்களும் பெரியார் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்குங்கள் எனப் பெரியார் திடலை முற்றுகையிடுவது குறித்து யோசிப்போம்”

“பெரியாரை எதிர்க்கும் நா.த.க-வைத் தாங்கிப் பிடிக்கிறது பா.ஜ.க. ஆக, `சீமான், ஆர்.எஸ்.எஸ் ஏஜென்ட்’ என்கிறார்களே”

களஞ்சியம்
களஞ்சியம்

“அம்பேத்கரைக் கூடத்தான் பா.ஜ.க கொண்டாடுகிறது. அதற்காக அவரை இந்துத்துவவாதி என்பீர்களா… அவர்கள் தங்களுடைய லாபத்துக்காக அண்ணன் சீமானின் கருத்துகளை ஆதரிப்பதால், நாங்கள் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டோம் எனச் சொல்வது அயோக்கியத்தனம்”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಶೇ 80ರಿಂದ 90 ರಷ್ಟು ಇಂಧನ ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಿಂದ ಬರಬೇಕಿದೆ: ಗ್ಯಾಸ್ ಪೂರೈಕೆ ನಮ್ಮ ಆದ್ಯತೆ- ಕೇಂದ್ರ ಸಚಿವೆ ಶೋಭಾ ಕರಂದ್ಲಾಜೆ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,10,2026 (www.justkannada.in): ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದದಿಂದಾಗಿ ಇಂಧನ ಪೂರೈಕೆಯಲ್ಲಿ ವ್ಯತ್ಯಯವಾಗಿದೆ. ಶೇ...

ലെബനനില്‍ റഷ്യന്‍ സാംസ്‌കാരിക കേന്ദ്രം തകര്‍ന്നു; ആക്രമണത്തിന് പിന്നില്‍ ഇസ്രഈലെന്ന് റഷ്യ

  ലെബനന്‍: ലെബനനിലെ റഷ്യന്‍ സാംസ്‌കാരിക കേന്ദ്രത്തിന് നേരെ ഇസ്രഈല്‍ നടത്തിയ...

Iran: `போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்' – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால்...

Gas Companies: ఇవి ప్రపంచంలోనే అతిపెద్ద చమురు, గ్యాస్ కంపెనీలు.. టాప్ 10లో ఏ దేశం ఆధిపత్యం చెలాయిస్తుంది?

ప్రపంచంలోని అతిపెద్ద చమురు అండ్ గ్యాస్ కంపెనీలలో సౌదీ అరామ్‌కో, ఎక్సాన్‌మొబిల్,...