14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

Date:

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் ஒரு படுக்கையை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணிக்கு ஒதுக்கி விடுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில் இரண்டு பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதுண்டு. படுக்கைக்கு முழு பணத்தைக் கொடுத்துவிட்டு இரவு முழுவதும் இருக்கையில் உறங்க முடியாமல் அமர்ந்து கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஆர்.ஏ.சி பயணிகளுக்கு ஏற்படுகிறது. இது குறித்து பாராளுமன்ற பொது தணிக்கை கமிட்டியும் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது.

இதனால் பயணிகளிடையே சில நேரங்களில் சண்டை ஏற்படுகிறது. அந்தச் சண்டையைத் தீர்த்து வைக்க வேண்டிய நிலை டிக்கெட் பரிசோதகருக்கு ஏற்படுகிறது. ரயில்வேயில் டிக்கெட் புக்கிங் ஆன்லைன் இல்லாமல் மனிதர்கள் கையால் கையாளப்படும்போது நிர்வாக வசதிக்காக ஆர்.ஏ.சி முறை கொண்டு வரப்பட்டது.

கூடுதல் பயணிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.ஏ.சி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறை தொடர்ந்து அமலில் இருந்து வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே முதியோர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதையடுத்து ஆர்.ஏ.சி டிக்கெட் முறையை அடியோடு ஒழித்துவிடுவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதுள்ள ஏற்பாடுகள் பயணிகளின் வசதிக்காக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு முதல் கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ஆர்.ஏ.சி டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முழுக்க முழுக்க அனைத்து இருக்கைகளும் படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். ஆர்.ஏ.சி. இருக்கை இருக்காது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

9/11നുശേഷം രണ്ടാമത്തെ ഗ്രൗണ്ട് സ്റ്റോപ്പ്; അമേരിക്കയുടെ ആകാശം സുരക്ഷിതമാണോ?

9/11 ആക്രമണത്തിനുശേഷം രാജ്യവ്യാപകമായി വിമാനങ്ങളുടെ പുറപ്പെടല്‍ തടഞ്ഞ രണ്ടാമത്തെ ഗ്രൗണ്ട് സ്റ്റോപ്പ്...

திருப்பதி: 'ஒரு கிலோ முடி ரூ.84 ஆயிரம்' – பக்தர்கள் செலுத்திய முடி ரூ.119 கோடிக்கு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்பவர்கள் மொட்டை போட்டுக்கொள்வது வழக்கம். ஏழுமலையானைத் தரிசிக்க...