9
November, 2026

A News 365Times Venture

9
Monday
November, 2026

A News 365Times Venture

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் மரணம் – காப்பகத்தின் அலட்சியத்தால் விபரீதம்?

Date:

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமம் உள்ளது. இங்கு, தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் அங்கீகாரம்பெற்ற `டெர்ரே டெஸ் ஹோம்ஸ் ( TDH CORE ) கோர் டிரஸ்ட்’ என்ற தனியார் தொண்டு அமைப்பு பெண் குழந்தைகளுக்கான காப்பகத்தை நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் ஏரியில் இன்று குளிப்பதற்காக காப்பக ஊழியருடன் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் சென்றுள்ளனர். தொடர் மழைக் காரணமாக, ஏரி நிரம்பி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் மாணவிகள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ஏரியின் ஆழமான பகுதியில் பூமிகா (வயது 13), அல்லி (14), விஜயலட்சுமி (16), வள்ளியம்மாள் (16) என்கிற 4 சிறுமிகளும் சிக்கி வெளியேற முடியாமல் திணறினர்.

துயரச் சம்பவம் நடந்த ஏரிப்பகுதி

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காப்பக ஊழியரான தேன்மொழியும் ஏரியில் குதித்து மாணவிகளை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனாலும், துரதிஷ்டவசமாக 4 மாணவிகளும், காப்பக ஊழியர் தேன்மொழியும் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து மாணவிகளை ஏரிக்கு அழைத்துச் சென்றது ஏன்? யார் அனுமதி கொடுத்தது? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் காப்பக நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബുള്‍ഡോസര്‍ രാജിനെ ദീപാവലി ആഘോഷത്തിന് മുമ്പ് വീട് വൃത്തിയാക്കുന്നതിനോട് ഉപമിച്ച് ഹിമന്ദ ബിശ്വ ശര്‍മ

ഗവാഹത്തി: അസമില്‍ മുസ്‌ലിം കുടുംബങ്ങളെ ലക്ഷ്യമിട്ടുള്ള ബുള്‍ഡോസര്‍ രാജിനെ ദീപാവലി ആഘോഷത്തിന്...

Fire Accidents: దీపావళి వేళ హైదరాబాద్‌లో వరుస అగ్నిప్రమాదాలు.. భయాందోళనలో ప్రజలు..

నేడు దేశమంతటా ప్రజలు ఎంతో ఉత్సాహంగా దీపావళి పండుగను జరుపుకుంటున్న వేళ,...

കുറച്ച് കടുപ്പമേറിയതായി മാറി; ഇടക്കാല തെരഞ്ഞെടുപ്പിലെ തിരിച്ചടിക്ക് പിന്നാലെ തന്റെ കുടിയേറ്റ നയത്തെക്കുറിച്ച് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: തന്റെ കുടിയൊഴിപ്പിക്കല്‍ നയം വോട്ടര്‍മാര്‍ക്ക് ‘വളരെ കടുപ്പമേറിയതായി’ മാറിയിട്ടുണ്ടാകാമെന്ന് യു.എസ്...

'கொன்னுடுவேன்னு மிரட்டி வீடியோ எடுத்தாங்க' – துணை சபாநாயகர் தாக்கியது குறித்து கார்த்திக்

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள...