28
September, 2026

A News 365Times Venture

28
Monday
September, 2026

A News 365Times Venture

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

Date:

கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது.

ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று போர் நிறுத்தத்தை நோக்கிப் பேசுவது போலப் பேசியிருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்போ, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்று பேசியிருந்தார்.

அப்பாஸ் அராக்சி

ட்ரம்ப் என்ன சொன்னார்?

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்கு நியூயார்க் சென்றிருந்த ஈரான் அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லாம் சுமூகமாகப் போவதுபோலத் தெரிந்தது.

இந்த நேரத்தில்தான், நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ட்ரம்ப், ‘ஈரான் சொல்லும் ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை. நவம்பர் மாதத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஈரான் என்ன சொல்கிறது?

ட்ரம்ப் 7 நாள் திட்டத்தை நிராகரித்தது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில்…

“அதிபர் பெசெஷ்கியனும் நானும் போர் செய்வதற்காக நியூயார்க்கிற்கு வரவில்லை. நாங்கள் அமைதியை உருவாக்குவதற்காகவே வந்துள்ளோம்.

ஆயினும், ஒரு பேரழிவுப் போர் தொடங்கப்பட்டால் கூட, எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்க ஈரான் உறுதியுடன் உள்ளது.

அதேவேளையில், உண்மையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಭಾರತ ಮಂಟಪ ಮಾದರಿಯಲ್ಲಿ ‘ಕರ್ನಾಟಕ ಮಂಟಪ’ ನಿರ್ಮಾಣಕ್ಕೆ ಚಿಂತನೆ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು, ಸೆಪ್ಟಂಬರ್,28,2026 (www.justkannada.in): “ದೆಹಲಿಯಲ್ಲಿ ಭಾರತ ಮಂಟಪದ ಮಾದರಿಯಲ್ಲಿ ಜಕ್ಕೂರು, ...

ഫലസ്തീന്‍ അനുകൂല പ്രതിഷേധം: 50 ലധികം ആളുകളെ അറസ്റ്റ് ചെയ്തു

ലണ്ടന്‍: ലിവര്‍പൂളില്‍ നടന്ന ലേബര്‍ പാര്‍ട്ടി സമ്മേളനത്തിന് പുറത്ത് ഫലസ്തീന്‍ അനുകൂല...

Shai Hope: మమ్మల్ని దారుణంగా ముంచేశారు.. ఇలా ఆడతారని అస్సలు ఊహించలేదు: వెస్టిండీస్ కెప్టెన్

భారత్ , వెస్టిండీస్ జట్ల మధ్య జరిగిన తొలి వన్డే మ్యాచ్‌లో...

ആടിനെ പട്ടിയാക്കുന്ന പ്രവണത പ്രതിപക്ഷ നേതാവ് മാറ്റമില്ലാതെ തുടരുകയാണ്; മറുപടിയുമായി മന്ത്രി കെ മുരളീധരന്‍

തിരുവനന്തപുരം: പ്രതിപക്ഷ നേതാവ് പിണറായി വിജയന്‍ ആടിനെ പട്ടിയാക്കുന്ന പ്രവണത മാറ്റമില്ലാതെ...