26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

“தீவிரவாத நாடு, என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?" – பாக்., ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர்

Date:

நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரின் இடையே செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த

ஊடகவியலாளர் ஒருவர் , `பாகிஸ்தானில் இந்தியா எப்போது பயங்கரவாதத்தை ஆதரவளிப்பதை நிறுத்தும்’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த கையோடு, அமைச்சர் ஜெய்சங்கரும் அவருடன் வந்த பிரதிநிதிகளும் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறினர். இதற்கிடையே, அந்தச் செய்தியாளர் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி பேசுகையில், “பாகிஸ்தான் பிற நாடுகளின் நிலப்பரப்பைக் கைப்பற்ற முயல்வதைக் காட்டிலும் அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், தன் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே அந்நாட்டு மக்களுக்குச் செய்யும் நன்மையாகும்.

ஏனெனில், இத்தகைய செயல்களோ அல்லது ஐ.நா.வில் நாடகமாடுவதோ பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் கடன்களை அடைக்கப் போவதில்லை. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்தும் பாகிஸ்தான் அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை.

க்ஷிதிஜ் தியாகி

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஜூன் மாதத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உணவு மற்றும் மருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இந்த கவுன்சிலில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அளித்த பதில் வெறும் நடைமுறைத் தடைகளை எழுப்பியது மட்டுமே. இந்த கவுன்சிலின் தீவிர விசாரணைக்கு முழு தகுதியுள்ள ஒரு நாடு இருக்குமேயானால், அது பாகிஸ்தான் மட்டுமே” எனத் தெரிவித்தார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ದಸರಾ ಮಹೋತ್ಸವ ರಥ ಮುಂದೆಯೂ ಸಾಂಗವಾಗಿ ಸಾಗಲಿ- ಲೇಖಕಿ ವೈದೇಹಿ

ಉಡುಪಿ,ಸೆಪ್ಟಂಬರ್‌,25,2026 (www.justkannada.in) ವಿಜಯನಗರ ಸಾಮ್ರಾಜ್ಯ ಕಾಲದಿಂದ ದಸರಾ ಮಹೋತ್ಸವದ ರಥ...

ഇന്ത്യയുമായുള്ള സംഘര്‍ഷത്തില്‍ സമയോചിതമായ ഇടപെടലിന് ട്രംപിനോട് നന്ദി പറഞ്ഞ് പാക് പ്രധാനമന്ത്രി

ന്യൂയോര്‍ക്ക്: 2025ലെ ഇന്ത്യയുമായുള്ള സംഘര്‍ഷത്തില്‍ യു.എസ് പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപിന്റെ ‘സമയോചിതമായ...

ADR Report: 4 ఏళ్లలో పార్టీలు మారిన 111 మంది ఎంపీలు, ఎమ్మెల్యేలు.. ఎక్కువ మంది చేరిన పార్టీ ఏదంటే..

ADR Report: 2022-2026 మధ్య కాలం నాలుగేళ్లలో పార్లమెంట్, అసెంబ్లీలకు గెలిచిన...

ദല്‍ഹിയില്‍ ഭജന്‍ ക്ലബ്ബിങ്ങില്‍ പങ്കെടുത്ത് മോദി; വിമര്‍ശനവുമായി ദീപ്‌കെ

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയില്‍ ഭജന്‍ ക്ലബ്ബിങ്ങില്‍ പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി പങ്കെടുക്കുന്നതിന്റെ വീഡിയോ...