25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

தேர்தல் ஆணையம் விவகாரம்: “ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" – ராகுல் காந்தி

Date:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தேர்தல் முறைகேடுகளுக்கு பின்னணியில் இருந்து சதி செய்து, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதுதொடர்பாக கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி

நாட்டின் நலனைக் கருதி ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகி “அப்ரூவராக” மாற வேண்டும். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி “வாக்கு திருட்டு” பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வந்ததன் காரணமாகவே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் ஞானேஷ் குமாருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தும் முறைகேடாகவே நடத்தப்பட்டன என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கடந்த 2025 பிப்ரவரியில் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக நான் அளித்த மறுப்பு குறிப்பை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மேலும், 2014-க்குப் பிறகு பாஜக 30 முதல் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று அமித் ஷா பேசிய பழைய வீடியோக்களையும், 2024 தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களை வெல்லும் என்று பிரதமர் மோடி பேசியதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் எதிர்கொள்ளும் ஆட்சி எதிர்ப்பு அலையை, மோடியும் அமித் ஷாவும் மட்டும் எப்படி எதிர்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது புதிர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களின் வாக்கிலிருந்துதான் அரசியலமைப்புச் சட்டம் தன் அதிகாரத்தைப் பெறுகிறது. அந்த அரசியலமைப்பில் இருந்தே சட்டங்கள் உருவாகின்றன. சட்டங்களில் இருந்தே நமது பொது நிறுவனங்கள் இயங்குகின்றன. வாக்குரிமை சிதைக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டமும், அதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும், நிறுவனங்களும் தங்கள் மதிப்பையும் செல்லுபடியாகும் தன்மையையும் இழந்துவிடும். “திருடப்பட்ட வாக்குகள்” மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் சட்டவிரோதமானதே.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അദാനി കേസ്: മലയാളി മാധ്യമപ്രവര്‍ത്തകന്‍ രവി നായര്‍ക്ക് ഏഴ് ദിവസത്തിന് ശേഷം ജാമ്യം

അഹമ്മദാബാദ്: മലയാളി മാധ്യമ പ്രവര്‍ത്തകന്‍ രവി നായര്‍ക്ക് ജാമ്യം. അദാനി എന്റര്‍പ്രൈസസിന്റെ...

ICC Rankings: మారిన టీ20, వన్డే ఐసీసీ ర్యాంకింగ్ లిస్ట్.. ఇషాన్ కిషన్, అభిషేక్ శర్మ స్థానాలు ఇవే..

అంతర్జాతీయ క్రికెట్ మండలి (ICC) తాజాగా విడుదల చేసిన నూతన ప్లేయర్...

ആര്‍.എസ്.എസില്‍ ചേര്‍ന്നാല്‍ ആരോഗ്യപ്രശ്‌നങ്ങള്‍ മാറ്റാം: സുവേന്ദു അധികാരി

കൊല്‍ക്കത്ത: ശാരീരിക ബുദ്ധിമുട്ടുകള്‍ അനുഭവിക്കുന്നവര്‍ ആര്‍.എസ്.എസ് ശാഖകളില്‍ ചേര്‍ന്ന് ആരോഗ്യം വീണ്ടെടുക്കണമെന്ന്...

வீரமணி வழக்கு: `யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை' – ஸ்டாலின்

வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள்...