25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்… ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

Date:

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் ‘110’ விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி கூறியிருந்தனர். முதல்வரை சந்தித்துவிட்டு அமைச்சர் வன்னிஅரசுவையும் சந்தித்து பேசியிருந்தனர். விவசாயிகளுடனான சந்திப்பு முடிந்ததற்கு பிறகு அமைச்சரிடம் பரந்தூர் விவகாரம் குறித்து பேசினோம்.

வன்னி அரசு

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, “இது பெரும் மகிழ்ச்சியான நாள். நான்காண்டுகளாக பரந்தூர் மக்கள் தங்களின் நிலத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் போராட்டம் வென்றிருக்கிறது. நான்காண்டுகளாக அந்த மக்கள் பெருந்துயருக்கும் இன்னலுக்கும் ஆளாகியிருந்தனர்.

பரந்தூருக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. சொந்த ஊருக்குள் நுழைய அந்த மக்களிடம் காவல்துறை ஆதார் கார்டு கேட்டது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்கையில் எங்களையே விடமாட்டார்கள். நாங்களே டூவிலரில்தான் செல்வோம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை விரட்டியடிப்பதுதான் வளர்ச்சியா? நம்முடைய மக்களை சொந்த ஊரிலேயே அகதி ஆக்கிவிட்டு, வெளிமாநிலத்துக்காரர் யாருக்கோ விமான நிலையத்தை கொடுப்பது தரகு வேலைதானே?

வன்னி அரசு
வன்னி அரசு

இதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கூறினோம். அதானிக்காக நம் மக்களை ஏன் விரட்ட வேண்டும்? அவருக்காக கால்வாய், ஏரிகள் என நீர் நிலைகள் நிறைந்த பரந்தூரை ஏன் காலி செய்ய வேண்டும்? எனக் கேட்டோம். அவர்களுடன் கூட்டணியில் இருந்த போதிலும் எங்களுக்கு மக்களின் நலனே முக்கியமாகப்பட்டது. பரந்தூரில் விமானம் நிலையம் இல்லாமல் போனால் தமிழ்நாடு வளர்ச்சியே பெறாது என்பது பாஜகவின் நரேட்டிவ். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றனர். தேசப்பற்று, வளர்ச்சி என்பதற்கு எதிராக பேசினால் நக்சல் என முத்திரை குத்துகிறார்கள். திமுகவும் முன்பிருந்தே இந்தத் திட்டத்தில் உறுதியாக இருந்தது. அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், இப்போதைய முதல்வர் மக்களின் எண்ணங்களை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕಾವೇರಿ ವಿಚಾರದಲ್ಲಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಮತ್ತೆ ಹಿನ್ನಡೆ: CWRC ಆದೇಶ ಎತ್ತಿಹಿಡಿದ CWMA

ನವದೆಹಲಿ, ಆಗಸ್ಟ್, 25,2026 (www.justkannada.in):  ಕಾವೇರಿ ನದಿ ನೀರು ವಿವಾದಕ್ಕೆ...

ഗസയില്‍ ഇസ്രഈല്‍ സൈന്യം കൊലപ്പെടുത്തിയത് 21,500 കുട്ടികളെ; കണക്കുകള്‍ പുറത്തുവിട്ട് മീഡിയ ഓഫീസ്

ഗസസിറ്റി: 2023 ഒക്ടോബറിന് ശേഷം ഗസയില്‍ ഇസ്രഈല്‍ സൈന്യം 21,500 കുട്ടികളെ...

Kiss Car: బాయ్‌ ఫ్రెండ్‌ కారుకు 3,400 ముద్దులు.. షాకిచ్చిన పోలీసులు

ప్రేమికుల మధ్య ఉండే సంబంధాన్ని అమ్మాయి-అబ్బాయిలు బహుమతుల ద్వారా వ్యక్తపరుచుకుంటారు. ఒకరికొకరు...

KPSC ಹಗರಣ ತನಿಖೆ ಸಿಬಿಐಗೆ ವಹಿಸುವಂತೆ ಆಗ್ರಹ: ಸಿಎಂ ಗೃಹ ಕಚೇರಿ ಮುಂದೆ ABVP ಪ್ರತಿಭಟನೆ..

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,25,2026 (www.justkannada.in): ಕೆಪಿಎಸ್ ಸಿಯಲ್ಲಿ ನಡೆದಿದೆ ಎನ್ನಲಾದ ಪಶುವೈದ್ಯಾಧಿಕಾರಿ ನೇಮಕಾತಿ...