11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் – முழு விவரம்!

Date:

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 1,625 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் 65 இன்ஸ்பெக்டர்கள், 260 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் பணியிடங்கள் அடங்கும்.

இந்த 65 காவல் நிலையங்கள் 37 மாவட்டங்கள் மற்றும் 28 நகரங்களில் செயல்பட உள்ளன. சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுடன் சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களும் இதில் இடம்பெறுகின்றன.

ANTF தலைமையகத்தில் சைபர் லேப், கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ, ஃபீல்டு இன்டலிஜென்ஸ் யூனிட், ஸ்பெஷல் ஆபரேஷன் & இன்வெஸ்டிகேஷன் யூனிட், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, IT Support, Legal Unit உள்ளிட்ட 10 பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.

Narcotic Drugs

சைபர் லேப் மூலம் டிஜிட்டல் தடயவியல், மொபைல் போன் தரவு ஆய்வு, கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் பகுப்பாய்வு, சமூக வலைதள கண்காணிப்பு, OSINT உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரின் நிதி நடவடிக்கைகளை விசாரித்து, அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை கண்டறிந்து முடக்கவும் ANTF நடவடிக்கை மேற்கொள்ளும்.

ANTF தலைமையகத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 10581 என்ற Toll-Free எண், 9498410581 என்ற WhatsApp எண் மற்றும் Drug Free Tamil Nadu App மூலம் பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட உள்ளன. 65 ANTF காவல் நிலையங்களுக்கு வாகனங்கள், CCTV கேமராக்கள், Body-worn cameras, Walkie-Talkies உள்ளிட்ட நவீன உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையுடன் சுகாதாரம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, இளைஞர் நலன், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட அரசாணையில் வழிகாட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பில் உளவுத்தகவல், சைபர் தொழில்நுட்பம், நிதி விசாரணை, சொத்து முடக்கம் மற்றும் மறுவாழ்வு என பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் ANTF அமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഝാര്‍ഖണ്ഡ് പരീക്ഷ ക്രമക്കേടിനെതിരെ പ്രതിഷേധിച്ച വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്കെതിരെ പൊലീസ് അതിക്രമം; അപലപിച്ച് പ്രതിപക്ഷം

റാഞ്ചി: ഝാര്‍ഖണ്ഡില്‍ പരീക്ഷാ ക്രമക്കേടിനെതിരെ പ്രതിഷേധിക്കുന്ന വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്കെതിരെ പൊലീസ് അതിക്രമം. റാഞ്ചിയില്‍...

'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! – சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது....

CM Chandrababu: వైసీపీపై సీఎం చంద్రబాబు ఫైర్.. గంజాయి, రౌడీయిజంపై సంచలన వ్యాఖ్యలు

CM Chandrababu: రాష్ట్రంలో వైసీపీ ఒక బాధ్యత లేని పార్టీ అని...

അമിത് ഷാ പ്രസ്താവന നടത്തുന്നത് വരെ പാര്‍ലമെന്റ് സ്തംഭനം തുടരുമെന്ന് പ്രിയങ്ക ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: പൊലീസിന്റെ വിദ്യാര്‍ത്ഥി മര്‍ദ്ദനവുമായി ബന്ധപ്പെട്ട് കേന്ദ്ര ആഭ്യന്തര മന്ത്രി അമിത്...