5
October, 2026

A News 365Times Venture

5
Monday
October, 2026

A News 365Times Venture

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! – நடந்தது என்ன ?

Date:

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்படி 9-ம் தேதி காலையில் கோரிமேட்டு காவல்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 80-வது சுதந்திரதின தேசியக் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் தேசியக் கொடிகளுடன் அணிவகுப்புக்கு நின்று கொண்டிருந்தனர். அந்த மேடையில் ஏறிய அமித் ஷா, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைப்பதற்காக தேசியக் கொடியைக் கேட்டார்.

அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பெரிய காவிக்கொடி ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்தார். கொடி வந்துவிட்டது என்று அதைக் கையில் வாங்கிய அமித்ஷா, அது காவிக்கொடி என்று தெரிந்ததும் டென்ஷனானார். தொடர்ந்து, `தேசியக் கொடியைக் கொடுங்கள்’ என்று அவர் கடுகடுக்க, ஓடிச் சென்று தேசியக் கொடியை எடுத்து வந்து கொடுத்தார் நமச்சிவாயம்.

காங்கிரஸ் கட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், 2021 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர். அதேபோல இவருக்கு உள்துறை பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் ரங்கசாமி அனுப்பிய இலாகாப் பட்டியலை ஆளுநர் நிறுத்தி வைத்து தாமதப்படுத்தியதாக என்.ஆர்.காங்கிரஸார் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

 ಮೈಸೂರು ಅರಮನೆಗೆ ಎಂಟ್ರಿಕೊಟ್ಟ ಅಭಿಮನ್ಯು: ವಿಶೇಷ ಪೂಜೆ ಸಲ್ಲಿಕೆ

ಮೈಸೂರು,ಅಕ್ಟೋಬರ್,5,2026 (www.justkannada.in): ಕಳೆದ 6 ವರ್ಷಗಳ ಕಾಲ ವಿಶ್ವವಿಖ್ಯಾತ ಮೈಸೂರು...

നേഹ ബോറ തന്നേക്കാള്‍ മികച്ചതെന്ന് പറഞ്ഞതിനെ അംഗീകരിച്ച് ദീപ്‌കെ; താരതമ്യമല്ല, ഐക്യദാര്‍ഢ്യമാണ് വേണ്ടതെന്ന് നേഹ

ന്യൂദല്‍ഹി: തന്നേക്കാള്‍ കഴിവുള്ള നേതാവ് നേഹ ബോറ ആണെന്നുള്ള എക്‌സ് പോസ്റ്റ്...

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" – அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும்...

KL Rahul: సెంచరీ చేసినా ఉపయోగం లేదు.. అలా జరిగినందుకు బాధగా ఉంది..

వెస్టిండీస్‌తో జరిగిన మూడో వన్డేలో అజేయ శతకం సాధించినప్పటికీ, భారత వికెట్...