22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

இந்தியா கூட்டணி: “காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" – திமுக திட்டவட்ட அறிவிப்பு!

Date:

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா (யு.பி.டி), இடதுசாரிகள் உள்ளிட்ட மொத்தம் 15 கட்சிகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி திடீரென த.வெ.க பக்கமாகச் சென்றதால், ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க நீடிப்பதில் சிக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க தன் அதிகாரபூர்வ பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட – ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.

“இந்தியா” கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರಿನಲ್ಲಿ MIT ನ್ಯಾಚುರೋಪತಿ ಮತ್ತು ಯೋಗ ವಿಜ್ಞಾನ ಕಾಲೇಜು ಆರಂಭ

ಮೈಸೂರು,ಸೆಪ್ಟಂಬರ್‌,21,2026 (www.justkannada.in) : ಮಹಾರಾಜ ಎಜುಕೇಶನ್ ಟ್ರಸ್ಟ್‌ (ರಿ) ವತಿಯಿಂದ...

സ്വകാര്യ സര്‍വകലാശാലകള്‍ ലാഭം ലക്ഷ്യമിട്ട് പ്രവര്‍ത്തിക്കരുത്; അഞ്ച് വര്‍ഷത്തെ സാമ്പത്തിക കണക്കുകള്‍ തേടി സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: സ്വകാര്യ സര്‍വകലാശാലകള്‍ ലാഭം ലക്ഷ്യമിട്ട് പ്രവര്‍ത്തിക്കുന്ന സ്ഥാപനമായി മാറാന്‍ അനുവദിക്കില്ലെന്ന്...

அரசியல் மேடைகளில் பெண் இழிவு வார்த்தைகள்… கடுமையான எதிர்வினைகளால் வைப்போம் முற்றுப்புள்ளி!

அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே...

Story Board: కరువు కోరల్లో తెలుగు రాష్ట్రాలు.. పడిపోతున్న భూగర్భజలాలు.. తాగునీటికీ తప్పని కటకట

Story Board: నైరుతి రుతుపవనాల తిరోగమనం ప్రారంభమైంది. ఈ ఏడాది నైరుతి...