13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

Date:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், கடந்த மே 16ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.

எஸ்.பி. வேலுமணி

இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே எஸ்.பி.வேலுமணி வந்த போது, கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ‘துரோகிங்க அண்ணா இவனுக எல்லாம்’ என குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எஸ்.பி.வேலுமணியின் முகம் மாறிய நிலையில், டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன் இதுபோல பேசக் கூடாது என கடிந்து கொண்டார். குரல் எழுப்பிய தொண்டரை கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എബോളയും ആന്ത്രാക്‌സും ഉള്‍പ്പെടെ മാരക വൈറസുകള്‍; യു.എസ് ധനസഹായത്തോടെയുള്ള ഉക്രെയ്ന്‍ ബയോലാബ് രേഖകള്‍ പുറത്ത്

വാഷിങ്ടണ്‍: ഉക്രെയ്‌നിലേത് ഉള്‍പ്പെടെ ലോകമെമ്പാടുമുള്ള വിവിധ രാജ്യങ്ങളില്‍ യു.എസ് ധനസഹായത്തോടെ പ്രവര്‍ത്തിക്കുന്ന...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

Aqua Farmers: ఆక్వా రైతులకు మరోషాక్‌.. మూడు నెలల్లో రెండో సారి..

Aqua Farmers: ఆక్వా రైతులకు మరోసారి ఫీడ్ కంపెనీలు గట్టి షాక్...

ಜವಾಬ್ದಾರಿ ವಹಿಸುವಾಗ ಸ್ಪಷ್ಟತೆ ಇರಬೇಕು- ಮುಂದುವರೆದ ಸಚಿವ ಕೃಷ್ಣಭೈರೇಗೌಡರ ಅಸಮಾಧಾನ?

ಬೆಂಗಳೂರು,ಜೂನ್,13,2026 (www.justkannada.in): ಖಾತೆ ಹಂಚಿಕೆಯಾದರೂ ಸಚಿವರ ಮುನಿಸು ಮುಂದುವರೆದಿದ್ದು  ಈ...