18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" – முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

Date:

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், “3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30 ஆயிரமும், 4வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். குழந்தைகள் தான் உண்மையான சொத்து.

மக்கள் தொகை

அரசு குழந்தைகளை ஒரு முக்கிய பொருளாதார வளம் மற்றும் தேசிய சொத்தாகக் கருதுகிறது. வரும் நாட்களில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தையின் தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு தல்லிகி வந்தனம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

அதோடு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தேசிய அளவை ஒப்பிடுகையில் ஆந்திராவில் கருத்தரிப்பு அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. தேசிய அளவில் 2.1 என்ற விகிதத்தில் கருத்தரிப்பு இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இது 1.5 என்ற விகிதத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் தற்போது வசிக்கும் மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் 2047ம் ஆண்டு 60 வயதைக் கடந்து இருப்பார்கள். மத்திய அரசு மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അമേരിക്കയും ഇസ്രഈലും മുസ്‌ലിം രാജ്യങ്ങളെ ശത്രുക്കളാക്കുന്നു; സയണിസ്റ്റ് ഭരണകൂടത്തിനെതിരെ ഒരുമിച്ച് നില്‍ക്കണമെന്ന് പെസസ്‌കിയാന്‍

ടെഹ്‌റാന്‍: അമേരിക്കയും ഇസ്രഈലും ഭിന്നിപ്പിക്കുന്ന പദ്ധതികളിലൂടെ മുസ്‌ലിം രാഷ്ട്രങ്ങളെ പരസ്പരം ശത്രുക്കളാക്കുകയാണെന്ന്...

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது...

വേദിയിൽ മുഖ്യമന്ത്രിയും മന്ത്രിമാരും മാത്രം മതി; സത്യപ്രതിജ്ഞയിൽ കടുത്ത നിയന്ത്രണങ്ങളേർപ്പെടുത്തി ലോക് ഭവൻ

തിരുവനന്തപുരം: നിയുക്ത മുഖ്യമന്ത്രി വി.ഡി. സതീശനും മന്ത്രിസഭയും നാളെ സത്യപ്രതിജ്ഞ ചെയ്യാനിരിക്കെ...