8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

மும்பை: சுழற்றியடித்த புயல்; அவசரமாகத் தரையிறங்கிய ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

Date:

மும்பையில் நேற்று திடீரென சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கூரை வீடுகளில் தகரங்கள் அடித்து செல்லப்பட்டன. எங்கும் புழுதியாக இருந்தது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை அருகில் உள்ள முர்பாட் என்ற இடத்தில் நடந்த கட்சி நிர்வாகி ஒருவரின் குடும்பத் திருமணத்தில் பங்கேற்க செல்ல முடிவு செய்தார்.

இதற்காக அவர் மும்பை ஒர்லி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் முர்பாட் புறப்பட்டார். ஹெலிகாப்டர் மும்பை புறநகரில் உள்ள ஐரோலி என்ற இடத்தை நெருங்கியபோது சற்று தூரத்தில் கடுமையான புயல் காற்று வீசுவதை ஹெலிகாப்டர் பைலட் கவனித்தார்.

அங்கு சென்றால் புயலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் பைலட் தெரிவித்தார். உடனே பிரச்னை வேண்டாம் என்று கருதி ஹெலிகாப்டரைத் திருப்பும்படி ஷிண்டே கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

இதையடுத்து ஹெலிகாப்டர் பத்திரமாக ஜுகு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஷிண்டே திருமணத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குச் சென்றார்.

பைலட் சமயோகித்தமாகச் செயல்பட்டுள்ளார். ஹெலிகாப்டரில் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவரது உதவியாளர், பாதுகாவலர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளும் இருந்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നെറ്റ് എക്സാമിന് സംവരണ ‘കട്ട്’ ; അപേക്ഷിക്കാനാകാതെ അപേക്ഷാർത്ഥികൾ വലയുന്നു

യൂണിവേഴ്സിറ്റി ഗ്രാന്റ് കമ്മീഷൻ നടത്തുന്ന നെറ്റ് പരീക്ഷക്ക് അപേക്ഷിക്കാനാകാതെ അപേക്ഷാർത്ഥികൾ വലയുന്നു....

What’s Today : ఈ రోజు ఏమున్నాయంటే..?

నేడు కొడంగల్‌ నియోజకవర్గానికి సీఎం రేవంత్‌ రెడ్డి. కొడంగల్‌ వెంకటేశ్వరస్వామి ఆలయ...

ಅಮಾನತ್ತಾಗಿದ್ದ ಹೆಡ್ ಕಾನ್ಸ್ ಟೇಬಲ್ ಕಾಣೆ: ಪ್ರಕರಣ ದಾಖಲು

ಮೈಸೂರು,ಮೇ,7,2026 (www.justkannada.in):  ಅಮಾನತಿನಲ್ಲಿರುವ ನಗರ ಸಶಸ್ತ್ರ ಮೀಸಲು ಪಡೆ (ಸಿಎಆರ್)...

തർക്കം തെരുവിലേക്ക്; മുഖ്യമന്ത്രി ചർച്ചകൾക്കിടയിലും പരസ്പരം ഏറ്റുമുട്ടി പ്രവർത്തകർ

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രി പദത്തിനായുള്ള കോൺഗ്രസ് അണികളുടെ തർക്കം സമൂഹ മാധ്യമങ്ങളിൽ നിന്ന്...