30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

`திமுக வரக்கூடாது' – கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

Date:

தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்தான் விரும்புகிறார்களாம். கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியது, தேர்தல் களத்தில் தி.மு.க-வினருடன் ஆங்காங்கே மல்லுக்கட்டியது என பல விவகாரங்கள் களேபரத்தைக் கிளப்பியதால், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால், தங்களின் மேல் இருக்கும் பழைய வழக்குகளைத் தோண்ட ஆரம்பித்துவிடுவார்களோ…’ என்கிற அச்சம் த.வா.க சீனியர் நிர்வாகிகளுக்கு உண்டாகியிருக்கிறது.

வேல்முருகன் – மு.க ஸ்டாலின்

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும் கூட்டணியில் இருந்ததால், பெரியளவில் தொந்தரவுகள் இல்லை. தி.மு.க மீண்டும் ஆளும்கட்சியாக வந்தால், கண்டிப்பாக தங்களுக்குச் சிக்கல் இருக்கும் என கலங்கிப் போய் இருக்கிறார்களாம்.

கோவையில் முதல்முறையாகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் முடிந்த கையோடு தனக்காகத் தேர்தல் வேலை செய்த உள்ளூர் நிர்வாகிகளை, பந்தயச் சாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு வருமாறு அன்புக் கட்டளையிட்டாராம். அதனை ஏற்று வீட்டிற்கு வந்தவர்களுக்கு சுடச்சுடப் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அப்போது, ”எனக்காக நீங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை பார்த்திருக்கீங்க. உங்க எல்லாருக்குமே நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்” என நெகிழ்ந்தவர், ”தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சந்திப்போம்” எனவும் உருக்கமாகப் பேசி நன்றி சொன்னாராம். பாலாஜியின் தேன் சொட்டும் வார்த்தைகளைக் கேட்டு, கோவை உடன்பிறப்புகள் அனைவருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பேசியதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். லோக்கல் செல்வாக்கு கொண்ட அந்த நபர்கள், ராஜேந்திரனுக்கு எதிராக தேர்தல் வேலை பார்க்கப் போவதாக அப்போதே சூளுரைத்திருந்தார்கள்.

ராஜேந்திரன்

அதில், பணக் கடவுள் பெயர் கொண்ட நிர்வாகி ஒருவர், தேர்தலில் ராஜேந்திரனுக்கு எதிராக இறங்கி வேலை செய்திருக்கிறாராம். அமைச்சர் மீதான கடுப்பில் எதிர் தரப்பு மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவாக வேலை பார்த்திருக்கிறார் அந்த நிர்வாகி. தேர்தல் சமயத்தில் அந்த நிர்வாகியை பெரிதாக சட்டை செய்யாத ராஜேந்திரன், ரிசல்ட் நெருங்க நெருங்கக் கலக்கத்தில் புலம்பி வருகிறாராம்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், ‘மார்க்’ புள்ளியின் தொகுதியில்தான் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குச் சதவிகிதம் எகிறியதற்கு, சூரிய கட்சியின் தாராள பட்டுவாடாவும் முக்கிய காரணம் என்கிறார்கள். ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை, பூத் வாரியாக ஆய்வு செய்து, வாக்களிக்க வராதவர்களை ஆட்களை வைத்து அழைத்துவந்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள். ”இந்த முறை வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடும் ஆசையில் இருக்கிறார் ‘மார்க்’ பிரமுகர். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே தன் சமூகம் சார்ந்த மீசை மாண்புமிகுவை சந்தித்து, அந்த ஆசையை நிறைவேற்ற அடிபோட்டிருக்கிறார்” என்கிறார்கள் உப்புநகர் உடன்பிறப்புகள்.

பூட்டு மாவட்ட தலைநகரில், ‘சூரிய’ கட்சி மாண்புமிகுவின் வாரிசு களமிறங்கினார். இலைக்கட்சியின் சார்பில் போட்டியிடுபவர், சொந்த ஊரில் செல்வாக்கு படைத்தவர் என்பதால், தனது வாரிசை ஜெயிக்க வைக்க கடும் பகீரதப் பிரயத்தனம் செய்திருந்தார் மாண்புமிகு. இதனடையே, விசில் கட்சி வேகம் காட்டியதால், களத்தில் போட்டி அதிகமானது. எப்படியாவது வாரிசை வெற்றிபெற வைக்க, ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் வரையில் பணம் இறக்கியிருக்கிறார் மாண்புமிகு. இதில் வேடிக்கை என்னவென்றால், பணம் வாங்கிய பலரும் வாக்கு செலுத்த வரவில்லையாம். கடுப்பான வாரிசு, தனக்கு ஓட்டுப் போடாதவர்களின் பட்டியலை பூத் வாரியாக எடுத்து, கொடுத்த காசைத் திருப்பி வாங்கிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.

மஞ்சள் மாவட்டத்தில், சூரியக் கட்சியிலிருந்து விநியோகம் செய்த ஸ்வீட் பாக்ஸ்களை, நிர்வாகிகள் பதுக்கிய விவகாரம் கோடை வெயிலையும் தாண்டி அனல் அடிக்கிறது. தலைமை கொடுத்தது போதாதென்று, உள்ளூர் அமைச்சரும் தன் கையிலிருந்து பணத்தைக் கொடுத்திருக்கிறார். அதிலும் பணத்தை விழுங்கியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அனைத்து வட்ட செயலாளர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து அமைச்சர் விசாரித்தபோதுதான், ஆளுக்கு ஐந்து லட்டுகளை விழுங்கியது வெளியே வந்திருக்கிறது. வட்டங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை கை கலப்பாக மாறி, சட்டை கிழிந்தபடி வெளியே வந்திருக்கிறார்கள். இவ்விவகாரம் தலைமைக்கு புகாராகச் செல்ல, கலக்கத்தில் இருக்கிறார் மாண்புமிகு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

UGC Net: యూజీసీ నెట్ నోటిఫికేషన్ విడుదల.. ముఖ్యమైన తేదీలు ఇవే..

నేషనల్ టెస్టింగ్ ఏజెన్సీ (NTA) జూన్ 2026 సెషన్‌కు సంబంధించిన యూజీసీ...

ಬೌರಿಂಗ್ ಆಸ್ಪತ್ರೆ ಕಾಂಪೌಂಡ್ ದುರಂತ: ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲಿಸಿದ ಲೋಕಾಯುಕ್ತ ನ್ಯಾ.ಬಿ.ಎಸ್. ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,30,2026 (www.justkannada.in):  ಭಾರೀ ಮಳೆಯಿಂದಾಗಿ ಬೌರಿಂಗ್ ಆಸ್ಪತ್ರೆಯ ತಡೆಗೋಡೆ ಕುಸಿದು...

മുഖ്യമന്ത്രി സ്ഥാനത്തേക്ക് വി.ഡി സതീശന്‍ എന്നതാണ് ജനവികാരം; പിന്തുണയുമായി മുസ്‌ലിം ലീഗ്

മലപ്പുറം: പ്രതിപക്ഷ നേതാവ് വി.ഡി സതീശന് പരസ്യ പിന്തുണയുമായി മുസ്‌ലിം ലീഗ്....