28
April, 2026

A News 365Times Venture

28
Tuesday
April, 2026

A News 365Times Venture

`ஆட்சிக்கு வழிதேடும் நேரத்தில்.!' – மாநில தலைமையை மாற்றும் முடிவில் டெல்லி; ரேஸில் குதித்த கதர்கள்

Date:

கூட்டணி பஞ்சாயத்து.!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் செல்வபெருந்தகை.

இந்த பதவிக்கு இவர் வந்து சுமார் இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்கிற பஞ்சாயத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டவர்கள் த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.

மற்றொருபுறம், மாநில தலைவர் செல்வபெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதே நமக்கு பாதுகாப்பு என டெல்லி மேலிடத்திடம் வலியுறுத்திவந்தனர். ராகுல் காந்தி தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என முதலில் கூறப்பட்டது. பிறகு செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவுடன் பேசி, தி.மு.க கூட்டணியை இறுதி செய்தார். இதனை தொடர்ந்தே தொகுதி பங்கீடு முடிந்தது.

ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை

ஆர்வம் காட்டாத ராகுல்…

காங்கிரஸ் -தி.மு.க இடையே கூட்டணி மலர்ந்தாலும் களத்தில் அது பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. பல இடங்களில் தி.மு.க-வினர் காங்கிரஸ் கட்சியினருக்கு போதிய அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்கிற முணுமுணுப்பு காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது.

மற்றொருபுறம், தி.மு.க.தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடன், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்தால் தேர்தல் களத்தில் நன்றாக எடுபடும் என இரண்டு கட்சியின் நிர்வாகிகளும் விரும்பினார்கள். ஆனால், ராகுல் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரவே ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதோடு, செல்வபெருந்தகையுடன் தேர்தல் பிரசாரம் செய்ய அவர் விரும்பவில்லை என்கிற தகவலும் காங்கிரஸ் கட்சிக்குள் உலவியது.

செல்வபெருந்தகை சொதப்பல் – ராகுல் வருத்தம்

தி.மு.க தரப்பில் ராகுல் – ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதா? என கேட்டதற்கு, காங்கிரஸ் தரப்பில் பதில் சொல்லமுடியவில்லை. ராகுல் காந்தி தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார். அதில் செல்வபெருந்தகை செய்த,மொழிபெயர்ப்பும் சொதப்பியது. இதனால் செல்வபெருந்தகை மீது ராகுல் கடும் வருத்ததில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்தபோது, செல்வபெருந்தகை போட்டியிடும் ஸ்ரீபெரும்பத்துார் தொகுதிக்கு ராகுலை பிரசாரத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் பொன்னேரிக்கு பிரசாரத்திற்கு மட்டும் ஓ.கே சொல்லியுள்ளார். இதனால் செல்வபெருந்தகையுடன் ராகுலின் பிணக்கு அதிகமானது. ஏற்கனவே தமிழக கூட்டணி விசயத்தில் செல்வபெருந்தகை ராகுலுடன் ஒத்துபோகாததால் இனியும் மாநில தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணத்தை அப்போதே செல்வபெருந்தகையும் கைவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தலைமையை மாற்ற காங். திட்டம்

இதனால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் முதற்கட்டமாக மாநில தலைவர் பதவியை மாற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பிடிக்க இப்போதே ரேஸ் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லக்குமார், சொர்ணா சேதுராமன், மெய்யப்பன் என பலரும் இந்த பதவிக்கு மோத ஆரம்பித்துள்ளார்கள்.

தொடங்கிய தலைவர் ரேஸ்…

ராகுலின் நெருக்கத்தை பயன்படுத்தி சீட் வாங்க மாணிக்கம் தாகூர் நினைக்கிறார். ப்ரியங்காவின் துணையுடன் இந்த பதவியை பிடிக்க ஜோதிமணியும், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் மூலம் கார்த்தி சிதம்பரமும் காய் நகர்த்துகிறார்கள். செல்லக்குமார் வயது அறுபதை கடந்துவிட்டது. அதனால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அறுபது வயதுக்கு குறைவான தீவிர செயல்பாட்டாளர் ஒருவரையே மாநில தலைவராக்க ராகுல் நினைக்கிறார். த.வெ.க தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தால், மாணிக்கம் தாகூருக்கு தலைவர் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்.

அதே நேரம் கார்கே மாநில தலைவர் மாற்றத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பார் என்கிற கேள்வியும் உள்ளது. ஒருவேளை மாற்றம் உறுதியானால், அதில் தனது ஆதரவாளர் இருக்க வேண்டும் என கார்க்கேவும் திட்டமிடுகிறார். இதனால் காங்கிரஸ் மாநில தலைவருக்கான ரேஸ் இப்போதே வேகம் எடுத்துள்ளது. ஆட்சிக்கு யார் வருவார்கள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்துவரும் நிலையில், அதை ஒருபொருட்டாகவே கருதாமல் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கிளம்பியிருக்கும் போட்டி வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വടക്കുകിഴക്കന്‍ സംസ്ഥാനങ്ങള്‍ ഇന്ത്യയുടെ അഷ്ട ലക്ഷ്മി; കോണ്‍ഗ്രസ് സിക്കിമിലെ ആരോഗ്യ സംവിധാനങ്ങളെ അവഗണിച്ചു: മോദി

ന്യൂദല്‍ഹി: വടക്കുകിഴക്കന്‍ സംസ്ഥാനങ്ങളെ ഇന്ത്യയുടെ അഷ്ടമി ലക്ഷ്മി (എട്ട് സമ്പത്തുകളുടെ ലക്ഷ്മി)...

Bank Robbery: పట్టపగలు SBI బ్యాంక్‌లో ఘరానా దోపిడీ.. వీడియో వైరల్

Bank Robbery: గుజరాత్‌లోని సూరత్ నగరంలో స్టేట్ బ్యాంకు అఫ్ ఇండియా...

ಮೇ ಅಂತ್ಯಕ್ಕೆ ಹೈಕಮಾಂಡ್ ಒಂದು ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬರಬಹುದು- ಸಚಿವ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ನವದೆಹಲಿ,ಏಪ್ರಿಲ್, 28,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಹೈಕಮಾಂಡ್...

തൊഴിലിടങ്ങളിലെ ലൈംഗികാതിക്രമം: കേസന്വേഷണങ്ങൾക്ക് മുമ്പ് പരാതിയുടെ പകർപ്പ് പ്രതിക്ക് നൽകണമെന്ന് ഹൈക്കോടതി

കൊച്ചി: തൊഴിലിടങ്ങളിലെ ലൈംഗികാതിക്രമം തടയുന്നതിനുള്ള പ്രത്യേക നിയമമായ പോഷ് ആക്ട് പ്രകാരം...