வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் – ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண்.
ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இதை ஆதார் கார்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே.
சரியான ஆவணங்களைக் கொடுத்து வெளிநாட்டினர் கூட இந்தியாவில் ஆதார் கார்டை பெறலாம். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் – குறிப்பிட்ட அந்த நபர் 182 நாள்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும்.
ஆதார் கார்டை வெறுமனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
ஆதார் கார்டை பிறந்த தேதிக்கான ஆவணமாகவும், உறவுமுறைக்கான ஆவணமாகக் கூட பயன்படுத்த முடியாது.
ஆக மொத்தம் ஆதார் கார்டு என்பது முகவரி மற்றும் அடையாளத்திற்கான ஆவணம் மட்டுமே.





