26
April, 2026

A News 365Times Venture

26
Sunday
April, 2026

A News 365Times Venture

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' – புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

Date:

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா ‘தெலுங்கானா ராஷ்டிர சேனா’ என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார்.

TRS

தெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட்சியின் பெயரை அறிவித்த கவிதா, ‘தெலங்கானா தனி மாநில கோரிக்கையின் போது இருந்த கே.சந்திரசேகர் ராவ், இப்போது இல்லை. அவர் நிறையவே மாறிவிட்டார்.

ஒரு சிலரின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடந்த குளறுபடிகளுக்கு எதிராக கேள்வி கேட்டதற்காக நான் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன். அந்தத் திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் இன்னும் கே.சி.ஆர் யைச் சுற்றி இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலத்தின் நலன்களையும் உரிமைகளையும் மையப்படுத்தியே தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த கட்சியின் பெயரும் மாறிவிட்டது, கொள்கைக் கோட்பாடுகளும் மாறிவிட்டது.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

ஒரு கட்சி அது எதற்காக உருவாக்கப்பட்டது என்கிற மையக்கருவையே மறக்குமானால் அந்த கட்சியால் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்க முடியாது. தெலுங்கானாவின் கனவுகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற ஒரு பிராந்திய கட்சி இங்கே தேவை. அந்தக் கட்சியாக நம்முடைய தெலுங்கானா ராஷ்டிர சேனா இருக்கும். தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலிருந்தும் என்னுடைய குடும்பத்திலிருந்தும் நானாக வெளியேறவில்லை. நம்மை தூக்கி வெளியே வீசினார்கள். இப்போது தெலுங்கானா மக்களைத்தான் என்னுடைய குடும்பமாக பார்க்கிறேன்’ என்றார்.

கவிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கவிதாவே முன்வந்து கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബി.ജെ.പിയിലേക്കുള്ള കൂടുമാറ്റം; രാഘവ് ഛദ്ദയ്ക്ക് 24 മണിക്കൂറുകൊണ്ട് നഷ്ടമായത് 10 ലക്ഷം ഫോളോവെഴ്‌സ്

ന്യൂദൽഹി: ആം ആദ്മി പാർട്ടിവിട്ട് ബി.ജെ.പിയിലേക്ക് ചേക്കേറിയ രാജ്യസഭാ എം.പി രാഘവ്...

Barrier Free Tolling: భారత్‌లో కొత్త రకం టోల్ విధానం.. వాహనాలు ఆపాల్సిన అవసరం లేకుండా…

జాతీయ రహదారులపై ప్రయాణాన్ని మరింత వేగంగా, సులభతరం చేసేందుకు కేంద్ర ప్రభుత్వం...

ರಾಜ್ಯದಲ್ಲಿ ಸಿಎಂ ಕುರ್ಚಿ ಖಾಲಿ ಇಲ್ಲ- ಸಚಿವ ಕೆ.ವೆಂಕಟೇಶ್

ಬೆಳಗಾವಿ,ಏಪ್ರಿಲ್,25,2026 (www.justkannada.in): ‘ರಾಜ್ಯದಲ್ಲಿ  ಸಿಎಂ ಕುರ್ಚಿ ಖಾಲಿ ಇಲ್ಲ. ‘ಅಧಿಕಾರ...

രാജ്യസഭാ അംഗങ്ങളുടെ കൂറുമാറ്റം; എം.പിമാരെ അയോഗ്യരാക്കണമെന്ന് ആം ആദ്മി

ന്യൂദൽഹി: രാഘവ് ഛദ്ദ ഉൾപ്പെടെ ആം ആദ്മി പാർട്ടിയുടെ ഏഴ് രാജ്യസഭാ...