29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! – பின்னணி என்ன?

Date:

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன் என்பவர் போட்டியிடுவார் என விஜய் அறிவித்திருக்கிறார்.

இந்த சபரிநாதன் வேட்பாளர் ஆனதன் பின்னால் பெரும் சுவாரஸ்யம் இருப்பதாகக் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

ராஜேந்திரன்

சபரிநாதன் அப்பா ராஜேந்திரன். அவர் விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் விஜய்க்கு டிரைவராகப் பணியைத் தொடங்கியவர், இப்போது விஜய்க்கு நிழலாக உடனிருக்கும் நலம் விரும்பியாக இருக்கிறார்.

விஜய் எங்கே சென்றாலும் அவருக்குப் பின்னால் ராஜேந்திரன் இருப்பதைப் பார்க்க முடியும். தனது நெருங்கிய வட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே விஜய் இடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் அதில் ராஜேந்திரன் மிக முக்கியமானவர் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

விஜய் பனையூருக்கு வந்தாலும் சரி தனி விமானத்தில் வெளியூர்களுக்குப் பறந்தாலும் சரி ராஜேந்திரன் எப்போதும் உடன் இருப்பார். விஜய் காரின் முன்னிருக்கை எப்போதுமே ராஜேந்திரனுக்குத்தான்.

ராஜேந்திரன் - விஜய்
ராஜேந்திரன் – விஜய்

விஜய்யும் ராஜேந்திரனை ஒரு பணியாளர் போல பார்க்காமல் ‘அண்ணன்’ என்றுதான் பெர்சனலாக அழைப்பார் என்கின்றனர் இருவரின் பந்தத்தையும் அறிந்தவர்கள். ‘விஜய் கட்சி ஆரம்பத்து பொறுப்புகளைப் போடும்போது ராஜேந்திரனை அழைத்து, ‘அண்ணன் உங்களுக்கு எதாவது செய்யணும். என்ன பொறுப்பு வேணும்ணே…’ எனக் கேட்டிருக்கிறார்.

ராஜேந்திரன், ‘எனக்கு வயசாகிடுச்சே தம்பி…’ எனக் கூற, உடனே விஜய் அப்படியெனில் உங்களின் மகனை அழைத்து வாருங்கள் எனக் கூறி மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஒப்படைத்தார் என்கின்றனர் தவெகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள். சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியை ஒப்படைத்து மாவட்டச் செயலாளர் பதவியையும் வழங்கியிருந்தார் விஜய்.

விஜய்யுடன் ராஜேந்திரன் - சபரி
விஜய்யுடன் ராஜேந்திரன் – சபரி

விஜய் முதலில் தான் போட்டியிட விருகம்பாக்கம் தொகுதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் பெரம்பூருக்கு மாறலாம் என முடிவெடுத்தார். அதனால் முதற்கட்டமாக விஜய் இறுதி செய்த வேட்பாளர்களின் பட்டியலிலேயே விருகம்பாக்கத்தில் சபரியின் பெயரும் இடம்பெற்றது.

‘உங்களில் ஒரு சிலரை நானே நேரடியாகக் கைப்பட தேர்வு செய்திருக்கிறேன்’ என விஜய் வேட்பாளர்களிடம் பேசியிருக்கிறார். விஜய் அப்படி பெர்சனலாகத் தேர்வு செய்த ஒரு சில வேட்பாளர்களில் சபரிநாதனும் ஒருவர் என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪತಿ ಮರಣದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯ ನಿಭಾಯಿಸಿದ ಶಿಕ್ಷಕಿ: ಶಾಸಕರಿಂದ ಶ್ಲಾಘನೆ

  ಮೈಸೂರು, March.29,2026: ವೈಯಕ್ತಿಕ ದುಃಖದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯಕ್ಕೆ ಆದ್ಯತೆ ನೀಡಿದ...

കോണ്‍ഗ്രസ് ചെലവാക്കിയതിനേക്കാള്‍ അഞ്ചിരട്ടി പണം ബി.ജെ.പി കേരളത്തിനായി ചെലവിട്ടു; വികസനത്തിനുള്ള പണം സര്‍ക്കാര്‍ കൊള്ളയടിച്ചു: മോദി

പാലക്കാട്: കേരളത്തില്‍ ബി.ജെ.പി സര്‍ക്കാരുണ്ടാക്കുമെന്ന അവകാശവാദവുമായി പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി. പാലക്കാട്...

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' – விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று...

Rain Alert: రెయిన్ అలర్ట్.. రేపటి నుంచి ఈ ప్రాంతాల్లో భారీ వర్షాలు..

తెలంగాణ రాష్ట్రవ్యాప్తంగా గత కొన్ని రోజులుగా భానుడి భగభగలతో అల్లాడిపోతున్న ప్రజలకు...