13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?

Date:

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது.

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவும் நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.

வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்களிலும், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் இன்று (மார்ச் 12) பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், “நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இது போன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. உள்நாட்டு தேவைக்காக LPG விநியோகம் தடையின்றி தொடரும்.

ஹார்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யை விட மாற்று வழிகளில் கூடுதல் எண்ணெய் வருகிறது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்.

தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம். வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிப்பொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை. நாட்டிற்கு தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ധനക്ഷാമമില്ല, എല്‍.പി.ജി ഉത്പാദനം 28% വര്‍ധിപ്പിച്ചു; വ്യാജപ്രചരണം വേണ്ട: ഹര്‍ദീപ് സിങ്

ന്യൂദല്‍ഹി: ഇന്ത്യയിലെ ഊര്‍ജ ഇറക്കുമതി സുരക്ഷിതമായി തുടരുകയാണെന്ന് പെട്രോളിയം മന്ത്രി ഹര്‍ദീപ്...

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில்...

Lifetime Achievement Award: ‘ది వాల్’ రాహుల్ ద్రావిడ్ కు అరుదైన గౌరవం..

Lifetime Achievement Award: భారత మాజీ క్రికెటర్, మాజీ టీమిండియా కోచ్,...

ಗೃಹ ಬಳಕೆ ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಗೆ ಸಮಸ್ಯೆ ಇಲ್ಲ-ಸಚಿವ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in):  ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಕೊರತೆ ಎಂಬ ವಿಚಾರ,...