3
March, 2026

A News 365Times Venture

3
Tuesday
March, 2026

A News 365Times Venture

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! – உற்சாகம், அப்செட் – டெல்டா பரபர

Date:

விஜய் தஞ்சை விஜயம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய்.

விஜய்

இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது.

அப்செட்டில் அன்பில் தரப்பு?

இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, “இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது.

திருமண அழைப்பிதழ்

தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள்.

ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம்.

காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு.

விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம்.” என்றார்கள் விரிவாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പെട്രോള്‍, ഡീസല്‍ വില വര്‍ധനവുടനെയുണ്ടാകില്ല; ഇന്ത്യയില്‍ 25 ദിവസത്തേക്കുള്ള കരുതല്‍ എണ്ണ ശേഖരമുണ്ടെന്ന് കേന്ദ്രം

ന്യൂദല്‍ഹി: പശ്ചിമേഷ്യയിലെ സംഘര്‍ഷത്തിന്റെ സാഹചര്യത്തില്‍ എണ്ണ വിലയില്‍ വര്‍ധനവുണ്ടാകില്ലെന്ന് അറിയിച്ച് കേന്ദ്ര...

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட...

Power Demand: తెలంగాణ విద్యుత్ చరిత్రలో నయా రికార్డ్.. 18,139 మెగావాట్ల గరిష్ట డిమాండ్..!

తెలంగాణ రాష్ట్రం విద్యుత్ వినియోగంలో మరో అరుదైన మైలురాయిని అధిగమించింది. 2026,...

ಮನುಷ್ಯನ ಶ್ರೇಷ್ಠತೆಯ ವ್ಯಸನಕ್ಕೆ ತಮ್ಮ ಅನುಭಾವದ ಮೂಲಕ ಮದ್ದು ಅರೆದವರು ಕೈವಾರ ತಾತಯ್ಯ- ಕೆ.ವಿ.ಪ್ರಭಾಕರ್

ಕೋಲಾರ ಮಾರ್ಚ್, 3,2026 (www.justkannada.in):   ಮನುಷ್ಯನ ಶ್ರೇಷ್ಠತೆಯ ವ್ಯಸನಕ್ಕೆ ತಮ್ಮ...