25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

ம.நடராஜனின் சகோதரர் மரணம் – கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

Date:

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த  சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகலா. இந்த நிகழ்வுக்குக் கிளம்பும் முன்னரே, அதாவது நேற்று காலையிலேயே சாமிநாதனின் காலமாகிவிட்டார். இருந்தும் கடைசி நேரம் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தால் சரியாக இருக்காது என சசிகலா பசும்பொன் வந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இது தொடர்பாக விசாரித்தோம்.

ம.சாமிநாதன்

‘’தஞ்சாவூர் மாவட்டம் விளார் தான் சசிகலா கணவர் நடராஜனின் சொந்த ஊர். அவருடைய அப்பா மருதப்ப பண்ணையாருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு. நடராஜன் கூடப் பிறந்தவர்களில் மூத்தவர் சாமிநாதன்.

வயோதிகம் சார்ந்து எல்லோருக்கும் வர்ற சில பிரச்னைகளால் கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்தவர் நேற்று காலை காலமாகிட்டார்.

உடல் அடக்கம் இன்னைக்கு மதியம் விளாரில் நடக்குது.

சசிகலாவின் கட்சி அறிவிப்பு கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டதுங்கிறதால அதை ரத்து செய்ய வேண்டாமென சசிகலா சொல்லிட்டதாச் சொல்றாங்க.

ம.நடராஜன்

தென்மாவட்டங்களில் இருந்து பரவலா அவரது ஆதரவாளர்களும் வந்து கலந்து கிட்டதால கட்சியின் கொடியை மட்டுமாவது அறிமுகம் செய்யலாம்னு  அதைச் செய்திருக்காங்க’’ என்ற அவர்கள்,

`கட்சியின் பெயரைப் பொறுத்தவரை ஏற்கனவே திவாகரன் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அல்லது ’அண்ணா எம்.ஜி.ஆர் திமுக’ மற்றும் மேலும் சில பெயர்களை செலக்ட் செய்து வைத்திருப்பதாகவும், கணவர் வீட்டில் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருந்தால் நேற்றே அதையும் அறிவித்திருப்பார் என்கிறார்கள்.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

900ത്തിലേറെ തവണ വെടിയുതിര്‍ത്തു;രക്ഷപ്പെടാന്‍ ശ്രമിച്ചവര്‍ക്ക് ‘വധശിക്ഷ’; ഗസയിലെ മെഡിക്കല്‍ സംഘത്തോടുള്ള ഇസ്രഈല്‍ സേനയുടെ ക്രൂരത

ഗസ: ഗസയില്‍ ഫലസ്തീനില്‍ അടിയന്തര സേവനം നടത്തുകയായിരുന്ന മെഡിക്കല്‍ സംഘത്തെ ഇസ്രഈല്‍...

Maruthi : మారుతికి హీరో కావలెను!

దర్శకుడు మారుతి ప్రస్తుతం తన కెరీర్‌లో అత్యంత క్లిష్టమైన దశను ఎదుర్కొంటున్నారు....

ಖಾಲಿ ಹುದ್ದೆಗಳ ಭರ್ತಿಗೆ ಸಿದ್ದ: ಈಗಲೂ 35ರಿಂದ 40 ಸಾವಿರ ಹುದ್ದೆ ಭರ್ತಿಯಾಗಿದೆ ಎಂದ ಸಚಿವ ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,25,2026 (www.justkannnada.in):  ರಾಜ್ಯ ಕಾಂಗ್ರೆಸ್ ಸರ್ಕಾರ ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬಂದು ಮೂರು...