24
February, 2026

A News 365Times Venture

24
Tuesday
February, 2026

A News 365Times Venture

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" – அமைச்சர் ரகுபதி

Date:

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால், அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம் ஆட்சி முடங்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமியின் வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறது. அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது.

ragupathi

கிருஷ்ணராயபுரத்தில் குவாரியல் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள். திருக்குறளை கூறுவார். திருக்குறளை மொழிபெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார் பாடுவார் நடிப்பார். ஆனால், மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேச்சை வேட்பாளர் கூட தான் வெற்றி பெறுவேன் என்றுதான் கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான், த.வெ.க-வின் நிலைமை. தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும். வந்த பிறகு பார்க்கலாம். காங்கிரஸ் தி.மு.க கூட்டணி குறித்து பத்திரிகையாளர் தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம். பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம். ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை. யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಿಷನ್ ಪ್ರಕೃತಿ : ರಾಜ್ಯದ 10 ಶಾಲೆಗಳಿಗೆ ‘ಅತ್ಯುತ್ತಮ ಶಾಲೆ’ ಪ್ರಶಸ್ತಿ ಪ್ರದಾನ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,23,2026 (www.justkannada.in): ಸಮಗ್ರ ಶಿಕ್ಷಣ ಕರ್ನಾಟಕ (SSK) ಹಾಗೂ ಡಬ್ಲ್ಯೂ.ಡಬ್ಲ್ಯೂ.ಎಫ್...

കേരള സ്റ്റോറി പ്രമോഷന്‍; ലവ് ജിഹാദിന്റെ ഇരകളെന്ന് അവകാശപ്പെട്ട് 37 ഉത്തരേന്ത്യക്കാര്‍, കേരളത്തില്‍ നിന്നും ആരുമില്ല

കോഴിക്കോട്: കേരളത്തില്‍ നിന്നുള്ള ലവ് ജിഹാദ് ഇരകള്‍ എന്തുകൊണ്ട് പ്രമോഷന്‍ വേദിയിലില്ലെന്ന...

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' – பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம்...

Ganja Gang Attack: ప్రశ్నించాడనే కోపం.. పంచ్‌లతో ప్రాణం తీశారు

హైదరాబాద్ సిటీలో గంజాయి గ్యాంగ్ అరాచకాలకు హద్దే లేకుండా పోతోంది. తాజాగా...