27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Date:

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் கோர்ட்டில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சீமான்
சீமான்

இந்நிலையில் இன்று (அக்.19)நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಾದಿಕ್ ಪೈಲ್ವಾನ್ ಹುಟ್ಟು ಕಾಂಗ್ರೆಸ್ಸಿಗ: ಕಣದಿಂದ ಹಿಂದೆ ಸರಿದಿದ್ದಾರೆ-ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಉಪಚುನಾವಣೆ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ವಿರುದ್ದ...

ഹോര്‍മുസ് കടലിടുക്ക് അടച്ചു; അമേരിക്കയുടെയും സഖ്യകക്ഷികളുടെയും തുറമുഖങ്ങളിലേക്കുള്ള കപ്പല്‍ ഗതാഗതം നിരോധിച്ചു: ഐ.ആര്‍.ജി.സി

ടെഹ്‌റാന്‍: ഹോര്‍മുസ് കടലിടുക്ക് വഴിയുള്ള യു.എസിന്റെയും സഖ്യകക്ഷികളുടെയും തുറമുഖങ്ങളിലേക്കും തിരിച്ചുമുള്ള കപ്പലുകളുടെ...

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! – நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை...

Israel -Iran War: ఇజ్రాయిల్ “కిల్ లిస్ట్” నుంచి ఇరాన్ మంత్రి, స్పీకర్ పేర్లు తొలగింపు.. ఎందుకు.?

Israel -Iran War: పశ్చిమాసియా ఉద్రిక్తతలు, యూఎస్-ఇజ్రాయిల్-ఇరాన్ మధ్య ఉద్రిక్తతలు ప్రపంచాన్ని...