29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

Date:

போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இதில் இரண்டு நாடுகளிலும் பாதிப்பும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போர்

ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரில் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்
பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்

இந்நிலையில் இந்தப் பயங்கர சம்பவத்துக்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் நடைபெறவிருந்த டி20 ட்ரை நேஷன் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம், இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കോണ്‍ഗ്രസ് എല്ലായ്‌പ്പോഴും ഇറ്റാലിയന്‍മാരെ പോലെയാണ് ചിന്തിക്കുന്നത്; അവര്‍ക്ക് ഇന്ത്യയില്‍ സ്ഥാനമില്ല: നിതിന്‍ നബിന്‍

ഹൈദരാബാദ്: കോണ്‍ഗ്രസ് പാര്‍ട്ടി എല്ലായ്‌പ്പോഴും ഇറ്റാലിയന്മാരെ പോലെയാണെന്ന് ചിന്തിക്കുന്നതെന്ന് ബി.ജെ.പി പ്രസിഡന്റ്...

'இதுதான் சரியான நேரம்!' – தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! – பின்னணி என்ன?

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக்...

ಮೈಸೂರು : ಅಡಿಕೆ ತೋಟಕ್ಕೆ ಸರಣಿ ಕಳ್ಳರ ಕಾಟ; ನೂರಾರು ಮರಗಳ ಹೋಂಬಾಳೆ ಕತ್ತರಿಸಿ ಪರಾರಿ

ಮೈಸೂರು, ಜೂನ್,29,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು ಸಮೀಪದ ಕಳಲವಾಡಿ ಗ್ರಾಮದ ರೈತ...