22
March, 2026

A News 365Times Venture

22
Sunday
March, 2026

A News 365Times Venture

கரூர்: “மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' – அண்ணாமலை கேள்வி

Date:

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட்டது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கெனவே இருந்த 3 மேஜைகளுடன் கூடுதலாக 2 மேஜைகள் போட்டு மொத்த 5 மேஜைகளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 8 மேஜைகளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று கூறினார்.

மா.சு – ரகுபதி

இதை விமர்சித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கரூரில் தவெக கூட்டத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் உடல்களை, 5 மேஜைகளில் 25 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்று, நேற்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

ஆனால், சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர், 8 மேஜைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்று கூறியிருக்கிறார்.

பிரேத பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தார்கள் என்பதிலே இத்தனை குழப்பம் ஏன்?” என்று சாடியிருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೊದಲಬಾರಿ ಗೆದ್ದವರಿಗೆ ಅವಕಾಶ ಕೊಡಬೇಕು: ಸಿಎಂ ಸ್ಪಂದಿಸುವ ವಿಶ್ವಾಸವಿದೆ- ಶಾಸಕ ಇಕ್ಬಾಲ್ ಹುಸೇನ್

ರಾಮನಗರ,ಮಾರ್ಚ್,21,2026 (www.justkannada.in):  ಮೊದಲ ಬಾರಿ ಗೆದ್ದವರಿಗೆ ಅವಕಾಶ ಕೊಡಬೇಕು ಸಿಎಂ...

ഇന്ധന വിലയില്‍ വര്‍ധനവ്; ഏപ്രില്‍ ഒന്ന് മുതല്‍ ആഘാതം ദൃശ്യമാകും: വ്യോമയാന മന്ത്രി

ന്യൂദല്‍ഹി: ഏവിയേഷന്‍ ഇന്ധന(എ.ടി.എഫ്)വിലയിലെ വര്‍ധനവിന്റെ ആഘാതം ഏപ്രില്‍ ഒന്നുമുതല്‍ ദൃശ്യമാകുമെന്ന് കേന്ദ്ര...

ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து – இஸ்ரேல் எச்சரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல்...

Dhurandhar : The Revenge : ‘ధురంధర్’ విధ్వంసం.. 3 రోజుల్లోనే రూ. 500 కోట్లు.. ఆదివారం అడ్వాన్స్ బుకింగ్స్ అరాచకం!

బాలీవుడ్ దర్శకుడు ఆదిత్య ధర్ డైరెక్షన్ లో రణవీర్ సింగ్ హీరోగా...