28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

Gaza: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்; "இது எளிதானது அல்ல" – ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்

Date:

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது.

இதனைப் பாராட்டி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம் | எகிப்து

பதிவு…

“நினைத்துப் பார்க்க முடியாத நரகத்தை அனுபவித்து வந்த 20 பணயக் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு இணைவதற்கும்… அளவிட முடியாத இழப்புகளைச் சந்தித்து வந்த காசா மக்கள் கடைசியாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்… கிடைத்த இந்த நாளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்… எனக்கு நிம்மதியாகவும் இருக்கிறது.

இதற்கான பாதை எளிதானது அல்ல. பணயக் கைதிகளை அவர்களது வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியைத் தரவும், போரை நிறுத்தவும் எனது நிர்வாகம் தொடர்ந்து உழைத்து வந்தது.

பாராட்டுகள்!

புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்த அதிபர் ட்ரம்பிற்கும், அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் உதவியோடு தற்போது மத்திய கிழக்கு அமைதிப் பாதைக்கு வந்துள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்குச் சம அளவிலான அமைதி, கண்ணியம் மற்றும் பாதுகாப்புடன் நீடித்த எதிர்காலம் அமையும் என்று நான் நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಉಪಚುನಾವಣೆ: ಎರಡೂ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ  ನಾವೇ ಗೆಲ್ಲುತ್ತೇವೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಬಂಡಾಯವೆದ್ದಿದ್ದ ಸಾಧಿಕ್ ಪೈಲ್ವಾನ್...

നേപ്പാള്‍ ജെന്‍ സി കലാപം അടിച്ചമര്‍ത്തി; മുന്‍ പ്രധാനമന്ത്രി കെ.പി ശര്‍മ ഒലി അറസ്റ്റില്‍

കാഠ്മണ്ഡു: നേപ്പാളില്‍ ജെന്‍ സി പ്രക്ഷോഭം അടിച്ചമര്‍ത്താന്‍ ശ്രമിച്ചെന്ന പരാതിയില്‍ മുന്‍...

ஈரான் போர்‌ குறித்து மோடி – ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! – சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து...

Aloo Roti Recipe: ఆలూ రోటీ ఇలా ప్రయత్నించండి.. పిల్లలు, పెద్దలు లొట్టలేసుకుంటూ తింటారు..

Aloo Roti Recipe: ప్రతిరోజూ ఒకే రకమైన బ్రేక్‌ఫాస్ట్‌ అల్పాహారం తింటూ...