29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" – உயர் நீதிமன்றம்

Date:

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் சோகம் – விஜய்

அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தச் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், “தலைமைப் பண்பே இல்லை” என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த நீதிபதி, சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும் இன்றைய விசாரணையில், சம்பவம் நடந்த பிறகு எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட ட்வீட்டை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியதைக் கவனித்த நீதிபதி செந்தில்குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Rain Alert: రెయిన్ అలర్ట్.. రేపటి నుంచి ఈ ప్రాంతాల్లో భారీ వర్షాలు..

తెలంగాణ రాష్ట్రవ్యాప్తంగా గత కొన్ని రోజులుగా భానుడి భగభగలతో అల్లాడిపోతున్న ప్రజలకు...

ಹಿಂದಿ ಕಲಿಯಬಾರದು ಅಂತೇನಿಲ್ಲ, ಆದ್ರೆ ಪರೀಕ್ಷೆ ಕಡ್ಡಾಯವಾಗಬಾರದಷ್ಟೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿಈ ವರ್ಷದಿಂದಲೇ ದ್ವಿಭಾಷಾ ನೀತಿ ಜಾರಿ ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ...

ഐ.പി.എല്ലില്‍ ചരിത്രം കുറിച്ച സഞ്ജുവിന്റെ സെഞ്ച്വറി; വമ്പന്‍ ലിസ്റ്റില്‍ ഇടം നേടി ഇഷാന്‍ കിഷനും

ഐ.പി.എല്ലിലെ ഓപ്പണിങ് മത്സരത്തില്‍ തകര്‍പ്പന്‍ വിജയമാണ് റോയല്‍ ചലഞ്ചേഴ്സ് ബെംഗളൂരു സ്വന്തമാക്കിയത്....

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! – பின்னணி என்ன?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்...