30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

கரூர்: “திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" – பாதிக்கப்பட்ட நபர்

Date:

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்

விஜய் வருவதற்கு முன்பே தள்ளு முள்ளு ஆரம்பித்துவிட்டது

இந்தக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் பேசுகையில்,

“விஜய் வருவதற்கு முன்பே தள்ளுமுள்ளு ஆரம்பித்துவிட்டது. அளவுக்கு அதிகமான கூட்டத்தால் எங்கும் நகர முடியாத நிலைமை.

திடீரென ‘பாண்டியன்’ என்ற ஆம்புலன்ஸ் கூட்டத்தின் குறுக்கே வந்ததும், மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் விலகி நெரிசலால் மூச்சுத்திணற ஆரம்பித்தனர்.

அதோடு திடீரென மின்சாரம் தடைபட இருட்டில் காலடி எடுத்து வைக்க முடியாமல் பலரும் தடுமாறி விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மக்கள் கூட்டம் ஏறிச் செல்ல, மூச்சுத்திணறலால் பலரும் அவதிப்பட்டு பலியாயினர்.

இதில் சிறு குழந்தைகளும் மாட்டிக்கொண்டது மிகவும் வேதனையானது. விஜய் வருவதற்கு முன்பே இப்படியான சூழல்தான் நடந்தது. அவர் வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகி, நிலைமை மோசமாகிவிட்டது” என்று வேதனையுடன் பேட்டியளித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഓശാന ദിനത്തിൽ പള്ളിയിൽ പ്രവേശനം നിഷേധിച്ച ഇസ്രഈൽ പൊലീസ് നടപടി; അപലപിച്ച് വത്തിക്കാൻ

ജെറുസലേം: ഓശാന ദിനത്തിൽ ജറുസലേമിലെ ‘ചർച്ച് ഓഫ് ദി ഹോളി സ്‌പൽച്ചർ’...

'சர்வே முடிவுகள்; கட்சிக் கட்டமைப்பு; MLA மீதான அதிருப்தி'- விஜய் பெரம்பூரை டிக் அடிக்க காரணம் என்ன?

விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும்...

Chairman’s Desk : చట్టసభల్లో మహిళలకు రిజర్వేషన్ పెను మార్పులు తెస్తుందా?

నియోజకవర్గాల పునర్విభజనతోపాటు దేశంలో 33 శాతం మహిళా రిజర్వేషన్లు అమలు కాబోతున్నాయి....

ಇರಾನ್ ಭಾರತದ ಮಿತ್ರರಾಷ್ಟ್ರವಾಗಿದ್ದಕ್ಕೆ ನಮ್ಮ ಹಡಗುಗಳನ್ನು ಮಾತ್ರ ಬಿಡುತ್ತಿದ್ದಾರೆ-ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ಇರಾನ್ ಭಾರತದ ಮಿತ್ರ ರಾಷ್ಟ್ರ. ಹೀಗಾಗಿ ನಮ್ಮ...