26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" – இபிஎஸ் தாக்கு

Date:

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று நண்பகல் குன்னூரில் உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து ஊட்டியிலும் உரை நிகழ்த்தினார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க- வைப் பிளக்க எல்லா வகையிலும் சதி செய்து வருகிறது தி.மு.க. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தி.மு.க கூட்டணியில்தான் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் பங்கு வேண்டும் என இப்போதே காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தால் தி.மு.க கூட்டணியில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ஒரு திட்டம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எந்தத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.

வீண் விளம்பரங்களுக்காகவே இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். ஊட்டி மெடிக்கல் காலேஜ் இதற்குச் சிறந்த உதாரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എസ്.ഐ.ആര്‍ ഒരുവര്‍ഷം പിന്നിട്ടപ്പോള്‍ വോട്ടര്‍ പട്ടികയില്‍ നിന്ന് പുറത്താക്കിയത് ആറ് കോടിയോളം വോട്ടര്‍മാരെ

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ തീവ്ര വോട്ടര്‍ പട്ടിക പുനപരിശോധന (എസ്.ഐ.ആര്‍) ഒരു വര്‍ഷം...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...

Saikrishna Lockup Death: సాయికృష్ణ లాకప్ డెత్ కేసులో సిట్ దూకుడు.. మరో ఇద్దరు పోలీసుల కోసం గాలింపు!

విజయవాడలో సంచలనం సృష్టించిన సాయికృష్ణ లాకప్ డెత్ కేసు దర్యాప్తును ప్రత్యేక...

ಟೌನ್ ಶಿಪ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ರೈತರಿಂದ ಭೂಮಿ ಕಸಿದುಕೊಳ್ಳುವುದು ತಪ್ಪು- ಪ್ರತಾಪ್ ಸಿಂಹ

ಹಾಸನ,ಜೂನ್,26,2026 (www.justkannada.in):  ಬಿಡದಿಯ ಟೌನ್ ಶಿಪ್ ನಿರ್ಮಾಣ ವಿಚಾರ ಜಟಾಪಟಿ...