30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

Date:

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. கொள்கை கூட்டம் – ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் விவாதித்து வருகின்றனர்.

அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவினரும் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி தங்கள் கூட்டத்தையும், பலத்தையும் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

அவ்வகையில் திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ஆர்.கே.நகர், விருதாச்சலம், காஞ்சிபுரம், விருதுநகர் எனப் பல்வேறு தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க – கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!” என்று கூறியிருக்கிறார்.

‘யார் பெருசுனு அடுச்சுக் காட்டு’ என போட்டா போட்டியாக நடந்து வரும் கூட்டம் சேர்க்கும் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಶಾಸಕರಿಗೆ 3 IPL ಟಿಕೆಟ್ ಕೊಡಲು ಕೆಎಸ್ ಸಿಎ ಒಪ್ಪಿಗೆ- ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು ,ಮಾರ್ಚ್,30,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಭಾರೀ ಚರ್ಚೆಗೆ ಗ್ರಾಸವಾಗಿರುವ  ಜನರಿಂದ...

ഹോര്‍മുസ് തുറന്നില്ലെങ്കില്‍ ഇറാന്റെ എണ്ണക്കിണറുകളും പവര്‍ പ്ലാന്റും ബോബിട്ട് നശിപ്പിക്കും; അന്ത്യശാസനവുമായി ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: ഹോര്‍മുസ് കടലിടുക്ക് ഉടനടി തുറന്നുകൊടുത്തില്ലെങ്കില്‍ ഇറാന്റെ എണ്ണക്കിണറുകളും പവര്‍ പ്ലാന്റുകളും...