31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

“தந்தை பெரியார் இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!'' – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Date:

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்” என 2021-ல் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 17-ம் தேதி ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்நாளில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்!” என பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்! உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்! சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்! யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்! பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்! வாழ்க பெரியாரின் புகழ்!” என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಉಪಚುನಾವಣೆಗಳಲ್ಲಿ ಬಿಜೆಪಿ ಗೆಲುವು ನಿಶ್ಚಿತ- ಮಾಜಿ ಸಿಎಂ ಬಿಎಸ್ ವೈ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,31,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಮತ್ತು ಬಾಗಲಕೋಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದ...

മഞ്ചേശ്വരത്ത് സ്ഥാനാര്‍ത്ഥിയെ നിര്‍ത്തിയത് എസ്.ഡി.പി.ഐയുടെ തന്ത്രം; വിമര്‍ശനം നടത്തിയത് തന്റെ വീഴ്ച; ഖേദം പ്രകടിപ്പിച്ച് തുളസീധരന്‍ പള്ളിക്കല്‍

കോഴിക്കോട്: മഞ്ചേശ്വരം മണ്ഡലത്തില്‍ എസ്.ഡി.പി.ഐ സ്ഥാനാര്‍ത്ഥിയെ നിര്‍ത്തിയത് ബി.ജെ.പിക്ക് സഹായകരമാകുമെന്ന പ്രസ്താവന...

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட…'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில்...

Trump-Bangladesh: మాకు రష్యా చమురు కొనుగోలుకు అనుమతివ్వండి.. ట్రంప్‌కు బంగ్లాదేశ్ విజ్ఞప్తి

పశ్చిమాసియా యుద్ధం కారణంగా ప్రపంచ దేశాల్లో చమురు, గ్యాస్ సంక్షోభం తలెత్తింది....