31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

`பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே' – மோடிக்கு போன் செய்த ட்ரம்ப்; என்ன பேசினார்கள்?

Date:

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்.

இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அருமையான போன்கால். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மகத்தான பணியைச் செய்து வருகிறார். நரேந்திரா: ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்களுடைய ஆதரவிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

மோடி-ட்ரம்ப்

இந்தப் போன்கால் குறித்து மோடி குறிப்பிட்டிருப்பதாவது…

“எனது 75-வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பிற்கும், அன்பான உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர் அதிபர் ட்ரம்ப்.

உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.

உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறை!

அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் மோடியுடன் நேரடியாக பேசியிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Indian Rupee: ఒకప్పుడు ఈ ముస్లిం దేశాలకు రూపాయే అధికారిక కరెన్సీ.. తర్వాత ఏం అయిందంటే!

Indian Rupee: భారత దేశ చరిత్రను పరిశీలిస్తే.. దేశ వైభవం ఏంటో...

ಉಪಚುನಾವಣೆಗಳಲ್ಲಿ ಬಿಜೆಪಿ ಗೆಲುವು ನಿಶ್ಚಿತ- ಮಾಜಿ ಸಿಎಂ ಬಿಎಸ್ ವೈ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,31,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಮತ್ತು ಬಾಗಲಕೋಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದ...

മഞ്ചേശ്വരത്ത് സ്ഥാനാര്‍ത്ഥിയെ നിര്‍ത്തിയത് എസ്.ഡി.പി.ഐയുടെ തന്ത്രം; വിമര്‍ശനം നടത്തിയത് തന്റെ വീഴ്ച; ഖേദം പ്രകടിപ്പിച്ച് തുളസീധരന്‍ പള്ളിക്കല്‍

കോഴിക്കോട്: മഞ്ചേശ്വരം മണ്ഡലത്തില്‍ എസ്.ഡി.പി.ഐ സ്ഥാനാര്‍ത്ഥിയെ നിര്‍ത്തിയത് ബി.ജെ.പിക്ക് സഹായകരമാകുമെന്ന പ്രസ്താവന...

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட…'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில்...