1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

Date:

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.

2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

ஜெகதீப் தன்கர்

அதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் சபாநாயகர் என்ற முறையில் நடுநிலைமையாகச் செயல்படாமல் ஆளும் கூட்டணி எம்.பி-க்களுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் குற்றம்சாட்டின.

இத்தகைய சூழலில், கடந்த ஜூலை பிற்பாதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (ஜூலை 21) குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.

இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.

நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டிலிருந்து குடியரசு துணைத் தலைவராகும் மூன்றாவது நபரானார்.

மோடி - சி.பி. ராதாகிருஷ்ணன்
மோடி – சி.பி. ராதாகிருஷ்ணன்

மறுமுனையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

இந்த நிலையில், ராஜினாமாவுக்குப் பிறகு மௌனமாக இருந்த ஜெகதீப் தன்கர் முதல்முறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஜெகதீப் தன்கர் அறிக்கை
ஜெகதீப் தன்கர் அறிக்கை

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அந்த அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த உயரிய பதவிக்கு நீங்கள் வந்தது நமது நாட்டின் பிரதிநிதிகளின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

பொது வாழ்வில் பரந்த அனுபவம் கொண்ட உங்கள் தலைமையின் கீழ், இந்தப் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும் மகிமையையும் பெறும்” என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಇಂದು ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ, ಏ.5ಕ್ಕೆ ಜಮೀರ್ ಪ್ರಚಾರಕ್ಕೆ ಬರಲಿದ್ದಾರೆ – ಸಚಿವ ಎಸ್.ಎಸ್ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ್

ದಾವಣಗೆರೆ,ಏಪ್ರಿಲ್,1,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಕ್ಷೇತ್ರದ ಉಪಚುನಾವಣಾ ಕಣ ರಂಗೇರಿದ್ದು...

ലൈംഗികാതിക്രമ കേസില്‍ രഞ്ജിത് 14 ദിവസം റിമാന്‍ഡില്‍; കള്ളക്കേസെന്ന് പ്രതിഭാഗം; ഒതുക്കി തീര്‍ക്കാന്‍ ശ്രമിച്ചെന്ന് പരാതിക്കാരി

കൊച്ചി: യുവനടിയുടെ ലൈംഗികാതിക്രമ പരാതിയില്‍ സംവിധായകനും ചലച്ചിത്ര അക്കാദമി മുന്‍ ചെയര്‍മാനുമായ...

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும்...

Sai Rajesh :మెగాస్టార్ సినిమాలకు మణిశర్మ ప్లస్ పాయింట్..

టాలీవుడ్ సెన్సేషనల్ డైరెక్టర్ సాయి రాజేష్ తనలోని అసలైన ‘మెగా’ ఫ్యాన్‌ను...