21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

“அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

Date:

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

“மற்ற மாவட்டங்களில் கூறிய வாக்குறுதிகளைப் போல, திண்டுக்கலிலும் பல பொய் பிரச்சாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது திமுக ஆட்சி.

மக்களின் நலன் கருதி, திண்டுக்கலில் 350 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனையை கட்டியது நம் அதிமுக அரசு. ஆனால் இன்று ஸ்டிக்கர் ஒட்டி, பெயர்களை வைத்து அவர்கள் கட்டியது போல் திறந்து வைக்கிறது திமுக

எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம்

இந்த பகுதியை சார்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படை வசதிகளும், ஊராட்சிகளுக்கு சேரவேண்டிய நிதிகளும், தனது கட்சியையும் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்வேற்காகவே பயன்படுத்திக் கொள்கிறார்.

`அதிமுக ஆட்சியில்’

நமது ஆட்சியில்தான் நிலக்கோட்டை தொகுதியில் முதன்முறையாக அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. குடிநீர் தேவைகளுக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம், மஞ்சலாறு மற்றும் மறுகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது; வத்தலகுண்டு பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு வழிவகை செய்தது.

இந்த ஐந்து ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் தொண்ணூறு ஆயிரம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்கள், ஆனால் அதில் வெறும் நாற்பது ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி

`எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது’

அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள். முடக்கப் பார்க்கிறார்கள். அத்தனையையும் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம்.

இது தொண்டர்கள் மிகுந்த கட்சி, உயிரோட்டமுள்ள கட்சி; எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட எம்பி ஆகலாம், எம்எல்ஏ ஆகலாம், ஏன் என்றால் முதலமைச்சர் கூட ஆகலாம். அதிமுகவின் பொதுச்செயலாளராக கூட ஆக முடியும்.

ஆனால் திமுகவில் பதவிக்கு வர வேண்டுமென்றால் அவர்களுடைய குடும்பத்தில் பிறக்க வேண்டும். கொள்ளையடிப்பதில் முதன்மை கட்சியாக திமுக உள்ளது. கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழக மக்கள் எல்லோருமே போராடி வருகின்றனர்,” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

തൃശ്ശൂരിൽ പടക്ക നിർമാണ ശാലയിൽ സ്ഫോടനം; മൂന്നുമരണം, 40 പേർക്ക് പൊള്ളലേറ്റെന്ന് പ്രാഥമിക നിഗമനം

തൃശൂർ: തൃശൂർ മുണ്ടത്തിക്കോട് വെടിക്കെട്ട് നിർമാണശാലയിൽ സ്ഫോടനം, തൃശൂർ പൂരത്തിനാവശ്യമായ വെടിക്കെട്ട്...

“கடைசி நேர ரிப்போர்ட்… கடுப்பான ஸ்டாலின்” – வேகம் எடுத்த உடன்பிறப்புகள்!

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும், சில தொகுதிகளில் கட்சியினர் காட்டும் சுணக்கமும் தி.மு.க...

Kedarnath: కేదార్‌నాథ్‌కు ఆ పేరు ఎలా వచ్చిందో తెలుసా? స్కంద పురాణంలో ఉన్న అసలు రహస్యం ఇదే!

Kedarnath: ఎంతో మంది హిందువులు జీవితంలో ఒక్కసారైన చూడాలని కలలు కనే...

ಬಿಜೆಪಿಯವರ ಮನೆ ಮೇಲೆ  ಇಡಿ ದಾಳಿ ಯಾಕಿಲ್ಲ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಕಿಡಿ

ಚಾಮರಾಜನಗರ, ಏಪ್ರಿಲ್, 21,2026 (www.justkannada.in):  ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರ ಕಾಂಗ್ರೆಸ್ ನವರನ್ನು...