1
May, 2026

A News 365Times Venture

1
Friday
May, 2026

A News 365Times Venture

"திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும்"-தயாரிப்பாளர்கள் சங்கம்

Date:

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் ‘ONLINE TICKET’ விற்பனை கணக்கு வழக்குகளை, சம்பந்தப்பட்ட திரையரங்கினர், மறைத்து, அவர்கள் வேறு ஒரு கணக்கினை தவறாக காட்டியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இது சம்பந்தமாக விசாரணை செய்ததில் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதேபோல் கணக்கு வழக்குகளை மாற்றி தவறான தகவல்களை மட்டுமே அளித்துள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது போன்று தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து திரையரங்குகளிலும் ‘TICKET’ வழங்கும் முறையை தமிழ்நாடு அரசே கணினி மயமாக்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்று ‘ONLINE TICKET CENTRALISED SERVER’ அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

திரையரங்கு

அதே கோரிக்கையை மீண்டும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடத்தில் நேரில் சென்று வலியுறுத்தி உடனடியாக அமல்படுத்த வேண்டுகோள் வைக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உரிய நிவாரணத்தை அந்த திரையரங்கினரிடம் இருந்து பெற்று தர வழிவகை செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

294ല്‍ 226ഉം നേടും, അധികാരം നിലനിര്‍ത്തും; ‘ബി.ജെ.പി ഓഫീസില്‍ തയ്യാറാക്കിയ’ എക്‌സിറ്റ് പോള്‍ ഫലങ്ങളെ തള്ളി മമത

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാള്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പില്‍ ബി.ജെ.പിക്ക് വിജയം പ്രവചിക്കുന്ന എക്‌സിറ്റ്...

RCB vs GT : బెంగళూరును చిత్తు చేసిన టైటాన్స్.. గిల్ మెరుపులు

RCB vs GT :  హోం గ్రౌండ్ నరేంద్ర మోదీ స్టేడియంలో...

KSDL ಸಾಧನೆ: ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್ ಗೆ ಕಾರ್ಮಿಕರ ಸಂಘದಿಂದ ಅಭಿನಂದನೆ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,30,226 (www.justkannada.in):  ಸರಕಾರಿ ಸ್ವಾಮ್ಯದ ಕರ್ನಾಟಕ ಸಾಬೂನು ಮತ್ತು ಮಾರ್ಜಕಗಳ...