21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

“கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' – முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

Date:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். காலை 11:00 மணிக்கு நத்தம் விஸ்வநாதன் பேசுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் மதியம் ஒரு மணிக்கு தான் மேடை ஏறி பேசினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் அவரின் பேச்சைக் கேட்காமல் கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிமுகவினர் கொத்தாக கிளம்பி சாப்பிட சென்றார்கள்.

அதிமுக பூத் கமிட்டி ஏஜெண்ட் கூட்டம்

மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சாப்பிட சென்றவர்களை மீண்டும் அமரச் சொல்லி அழைத்தபோதும் யாரும் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இறுதியில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன் கூட்டத்திற்கு வந்தீர்களா? சாப்பிட வந்தீங்களா? என எரிச்சலாக மைக்கில் பேசினார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து கூட்டத்தில் பேசி இருக்கலாம் பசியோடு எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்போம் என அதிமுக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் புலம்பி கொண்டே சென்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പാര്‍ട്ടിയുടെ പേര് റീല്‍സ് വെട്രി കഴകം എന്നാക്കണം; വിജയ് ഇപ്പോള്‍ ജനങ്ങള്‍ക്ക് മുന്നിലാണ് അഭിനയിക്കുന്നത്: എം.കെ സ്റ്റാലിന്‍

ചെന്നൈ: തമിഴ്‌നാട് മുഖ്യമന്ത്രി വിജയ്‌ക്കെതിരെ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി ഡി.എം.കെ നേതാവ് എം.കെ...

Lift Accident : లిఫ్ట్‌లో అడుగు పెట్టగానే మృత్యు ఉచ్చు.. గంటన్నరపాటు హైడ్రా రెస్క్యూ!

హైదరాబాద్‌లోని మూసాపేట ఆంజనేయ నగర్‌లో ఆదివారం ఉదయం తీవ్ర ఉత్కంఠ రేపిన...

യു.പിയില്‍ ബി.ജെ.പി ഭരണത്തില്‍ തകര്‍ത്തത് 151 അബേദ്ക്കര്‍ പ്രതിമകള്‍: അഖിലേഷ് യാദവ്

ലഖ്‌നൗ: ബി.ജെ.പി ഭരണകാലത്ത് ഉത്തര്‍പ്രദേശില്‍ ഡോ. ബി.ആര്‍ അംബേദ്‌റുടെ 151 പ്രതിമകള്‍...