15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" – ராகுல் காந்தி ஓபன் டாக்

Date:

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.

அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளையில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் ராகுல் காந்தி, அவர் ராஜா போலச் செயல்படுவதாகவும், மக்களின் குரலைக் கேட்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகிறார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந் ரெட்டி, கேரளா எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ராகுல் காந்தி உரையாற்றத் தொடங்கியபோது, ‘இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும்’ என்று கோஷங்கள் எழுந்தது.

அப்போது அந்தக் கூற்றை உடனடியாக மறுத்த ராகுல் காந்தி, “இல்லை… இல்லை… நான் ஒருபோதும் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்” என்று கூறினார்.

அதன்பின்னர் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்ததால்தான் மோடி தற்போது பிரதமராக இருப்பதாகவும், மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை அடுத்த சில நாள்களில் வெளியிடுவதாகவும் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಗೂಡ್ಸ್ ರೈಲು ಡಿಕ್ಕಿ : ಮೂವರು ಯುವಕರು ಸಾವು.

ಮುಂಬೈ,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in):  ಗೂಡ್ಸ್ ರೈಲು ರೈಲು ಡಿಕ್ಕಿಯಾಗಿ ಮೂವರು ಯುವಕರು...

ഏത് വിധേനെയും ഹോര്‍മുസ് തുറക്കും; ചൈനയും യു.കെയും ഉള്‍പ്പടെയുള്ള രാജ്യങ്ങള്‍ യുദ്ധക്കപ്പലുകള്‍ അയക്കുമെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: ഇറാന്റെ നിയന്ത്രണത്തിലുള്ള ഹോര്‍മുസ് കടലിടുക്ക് തുറക്കാന്‍ ഏത് മാര്‍ഗവും സ്വീകരിക്കുമെന്ന്...

இறுதியான என்.ஆர் – பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! – புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே...

Car Sold: ఇదెక్కడి పనికిమాలిన ఐడియా రా.. అద్దెకు తీసుకున్న కారును అమ్మడం ఏంటి రా బాబు..

అద్దె కారు తీసుకున్నారు.. లాంగ్ డ్రైవ్‌కు వెళ్లారు.. మధ్యలో ఓ కన్నింగ్...