14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா… கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக! – தகிக்கும் அரசியல் களம்

Date:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர்.

அன்வர் ராஜாவும், பாஜக உடனான கூட்டணியும்!

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில், அன்வர் ராஜா, இந்த மாதத்தில் முதல் வாரத்தில், “தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து, பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததில், அன்வர் ராஜாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது.

பாஜக – அதிமுக கூட்டணி

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா

இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பே, இன்று அன்வர் ராஜா திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

இதனையடுத்து, அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்குவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்குவது இது முதல்முறையல்ல.

2021-ம் ஆண்டும்…

2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி, ஆட்சியை தி.மு.க-விடம் இழந்தது அ.தி.மு.க.

இந்தத் தோல்விக்குக் காரணம் அ.ம.மு.க உருவானதும், பா.ஜ.க-உடனான கூட்டணி எனப் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தங்களின் தோல்விக்கு பாஜக-வுடனான கூட்டணிதான் முக்கியக் காரணம் எனத் தெரிவித்தனர்.

அதே கருத்தை, அதிமுக சீனியரான அன்வர் ராஜாவும் முன்வைத்தார். ஆனால், அதோடு நிற்காமல், தலைமை குறித்து கடுமையான விமர்சனம் வைத்ததோடு, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

நீக்கமும்.. இணைப்பும்…

இது தொடர்பாக, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பேசினார்.

இதனால், அப்போது சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கூட்டத்திலிருந்து வெளியேறினார் அன்வர் ராஜா. பின்னர், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது.

2023-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் அன்வர் ராஜா இணைந்த போது....
2023-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் அன்வர் ராஜா இணைந்த போது….

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில் 2023-ம் ஆண்டு, மீண்டும் அன்வர் ராஜா கட்சியில் இணைக்கப்பட்டார்.

ஆக, அன்வர் ராஜா முன்பு இருந்தே அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை.

இந்த நிலையில் தான், அவர் தற்போது திமுகவில் சேர உள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.എസ് -ഇസ്രഈല്‍ ആക്രമണത്തില്‍ മൊജ്തബ ഖാംനഇക്ക് സാരമായി പരിക്കേറ്റു; അവകാശവാദവുമായി യു.എസ് പ്രതിരോധ സെക്രട്ടറി

വാഷിങ്ടണ്‍: ഇറാന്റെ പുതിയ പരമോന്നത നേതാവ് മൊജ്തബ ഖാംനഇക്ക് യു.എസ് -ഇസ്രഈല്‍ ആക്രമണത്തില്‍...

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" – ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது....

Sachin Tendulkar: సచిన్ రిటైర్మెంట్ వెనుక ఇంత కథ ఉందా.. డ్రెస్సింగ్ రూంలోనే ప్లాన్..?

క్రికెట్ ప్రపంచంలో ‘దేవుడు’గా పిలవబడే సచిన్ టెండూల్కర్ పేరు వినగానే పరుగుల...