26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

"ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை…" – மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

Date:

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்கம் செய்து 7.48 கி.மீ தொலைவுக்கு சாலை போட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, சாலையின் நடுவிலிருக்கும் மரங்களை அகற்ற உரிய அனுமதி பெறுவதற்காக வனத்துறையை மாவட்ட நிர்வாகம் அணுகியது.

Accident (Representational Image)

அப்போது வனத்துறை அதற்கு ஈடாக 14 ஹெக்டேர் நிலத்துக்கான இழப்பீட்டைக் கோரியது.

மாவட்ட நிர்வாகத்தால் வனத்துறை கேட்ட இழப்பீட்டைத் தர முடியாததால், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை போட்டிருக்கிறது.

பாட்னா-கயா பிரதான சாலையில் போடப்பட்டிருக்கும் இந்த 7.48 கி.மீ சாலை நெடுகிலும் நடுவே மரங்கள் இருக்கின்றன.

பீகார் - சாலை
பீகார் – சாலை

அதுவும், மரங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தால்கூட கொஞ்சம் விபத்து நடைபெறாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவுமேகூட ஆபத்துதான். ஆனால், இந்தச் சாலையில் மரங்கள் குறுக்கு மறுக்காக இருக்கிறது.

இதனால், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கிடையிலான பிரச்னையில் வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடும் வகையில் சாலை போடுவதா என பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

ஆனாலும், வனத்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரையில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மரங்களை அகற்ற முன்வரவில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ADR Report: 4 ఏళ్లలో పార్టీలు మారిన 111 మంది ఎంపీలు, ఎమ్మెల్యేలు.. ఎక్కువ మంది చేరిన పార్టీ ఏదంటే..

ADR Report: 2022-2026 మధ్య కాలం నాలుగేళ్లలో పార్లమెంట్, అసెంబ్లీలకు గెలిచిన...

ദല്‍ഹിയില്‍ ഭജന്‍ ക്ലബ്ബിങ്ങില്‍ പങ്കെടുത്ത് മോദി; വിമര്‍ശനവുമായി ദീപ്‌കെ

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയില്‍ ഭജന്‍ ക്ലബ്ബിങ്ങില്‍ പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി പങ്കെടുക്കുന്നതിന്റെ വീഡിയോ...

"என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!"- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற...

LPG Cylinder: ఎల్పీజీ సిలిండర్ల డెలివరీ ఆగిపోతుందా? అక్టోబర్ 1 నుంచి మారనున్న నిబంధనలు..

అక్టోబర్ 1 నుంచి గృహ వినియోగదారుల సబ్సిడీ గ్యాస్ సిలిండర్ల కొరకు...