21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

Date:

‘கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்’ என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது…

“இன்று தந்தையர் தினம். மருத்துவர் ஐயா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவர் ஐயா நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி, மகிழ்ச்சியோடு 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அது மகனாக என்னுடைய கடமை.

ராமதாஸ், அன்புமணி

என் மீது உங்களுக்கு எதாவது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் இல்லை.

ஐயாவிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் நடந்தது. அவருக்கு சுகர், பி.பி உள்ளது. அதனால் தான், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக நீங்கள் சொல்வதை ‘டக் டக்’ என்று சுமுகமாக செய்கிறேன். வருத்தப்படாதீர்கள்… கோபப்படாதீர்கள்.

இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்களுடைய கனவுகளை நாங்கள் நனவாக்குவோம். உங்களுடைய 45 ஆண்டுகால உழைப்பு சாதாரண உழைப்பு கிடையாது. நீங்கள் இன்று தேசிய தலைவர்.

கடந்த ஆண்டு, ‘இந்தியாவின் மூத்த தலைவர்’ என்று உங்களை பிரதமர் மோடி கூறியது என்னால் மறக்க முடியாது. அந்த மதிப்பும், மரியாதையும் அனைவருக்கும் உள்ளது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബ്രാഹ്‌മണ്യത്തെ ഹൃദയത്തില്‍ കൊണ്ടുനടക്കുന്നവരാണ് ഈഴവര്‍: ജി.സുധാകരന്‍

ആലപ്പുഴ: ബ്രാഹ്‌മണ്യത്തെ ഹൃദയത്തില്‍ കൊണ്ടുനടക്കുന്ന ബ്രാഹ്‌മണരല്ലാത്ത വിഭാഗമാണ് കേരളത്തിന്റെ 33 ശതമാനം...

“தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" – அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம்...

Botsa Satyanarayana: 40 సంవత్సరాలుగా రాజకీయాల్లో ఉన్నాం.. ఒకరు పోతే వంద మంది వస్తారు…

విజయనగరంలో జరిగిన వైఎస్సార్‌సీపీ సమావేశంలో శాసన మండలి ప్రతిపక్ష నేత బొత్స...

ಒಬ್ಬ ನಿರಪರಾಧಿಯ ರಾಜೀನಾಮೆ ಪಡೆದಿದ್ದೇನೆ- ಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್‌

ಬೆಂಗಳೂರು,ಸೆಪ್ಟಂಬರ್‌,21,2026 (www.justkannada.in) ರಾಜ್ಯದಲ್ಲಿ ಇಂದಿನಿಂದ ಮೂರು ದಿನಗಳ ಕಾಲ ವಿಧಾನಮಂಡಲ...