14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

"எலான் மஸ்க் – ட்ரம்ப் பிரச்னையைத் தீர்த்து வைக்கத் தயார்" – ரஷ்யா கிண்டல்; மஸ்க்கின் பதில் என்ன?

Date:

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே பொதுவெளியில் பிரச்னை வெடித்து, வாக்குவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், இருவருக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான திமித்ரி மெட்வெடேவ்.

திமித்ரி மெட்வெடேவ்

இப்போது ரஷ்ய பாதுகாப்புப் பேரவையின் துணைத் தலைவராக இருக்கும் இவர், “D மற்றும் E இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் தாயாரா இருக்கிறோம்.

அதற்குத் தகுந்த கட்டணத்தை ஸ்டார்லின்க் பங்குகளாகப் பெற்றுக்கொள்கிறோம்” எனத் தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

இத்துடன், “சண்டை போடாதீர்கள் (Don’t Fight Guys)” என்றும் கூறியுள்ளார். இவரது நையாண்டிக்குச் சிரிக்கும் எமோஜியுடன் ரிப்ளைச் செய்துள்ளார் மஸ்க்.

அமெரிக்காவின் இரண்டு ஆகப் பெரும் ஆளுமைகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை ரஷ்யா ஆவலுடன் வேடிக்கை பார்ப்பதையே புதினின் நெருங்கிய நண்பரான மெட்வெடேவ் கிண்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ட்ரம்ப்பின் பிக் பியூடிஃபுல் பில் மசோதாவால் அவரது நண்பராக இருந்த எலான் மஸ்க் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார். ட்ரம்ப்பின் முகாமிலேயே பிரச்னைகள் இருக்கும் சூழலில் அவர் ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே இடைத்தரகராகச் செயல்பட முயல்வதையும் இதில் மெட்வெடேவ் சுட்டிக்காட்டியுள்ளார் என்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சர்வதேச விவகாரங்களுக்கான டுமா குழுவின் முதல் துணைத் தலைவர் திமித்ரி நோவிகோவ், “மஸ்க் முற்றிலும் மாறுபட்ட விளையாட்டை ஆடுகிறார், இதனால் அவருக்கு அரசியல் தஞ்சம் தேவைப்படாது. அப்படித் தேவைப்பட்டால் ரஷ்யா தஞ்சமளிக்க தயார்” எனக் கூறியுள்ளார்.

டிமிட்ரி நோவிகோவ்
டிமிட்ரி நோவிகோவ்

எலான் மஸ்க் – ட்ரம்ப் இடையிலான மோதல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் எலான் மஸ்க் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்பவர் என்றும், அவரது நிறுவனங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் குரலெழுப்பியுள்ளனர்.

ட்ரம்ப்பின் பெயர் எப்ஸ்டீன் பட்டியலில் உள்ளது என்றும் தான் புதிய கட்சி தொடங்கப்போகிறேன் என்றும் மஸ்க் பேசிவருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.28ಕ್ಕೆ ಒಳಮೀಸಲಾತಿ ಬಗ್ಗೆ ಸಭೆ: ಅಂದು ಸಮಸ್ಯೆ ಬಗೆಹರಿಯುತ್ತೆ- ಗೃಹ ಸಚಿವ ಪರಮೇಶ್ವರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): ಮಾರ್ಚ್ 28ಕ್ಕೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಒಳಮೀಸಲಾತಿ ಬಗ್ಗೆ...

ഹോട്ടലുകള്‍ കല്‍ക്കരിയിലേക്കും വീടുകള്‍ക്ക് പി.എന്‍ജിയിലേക്കും മാറണം; എല്‍.പി.ജി ക്ഷാമം പരിഹരിക്കാന്‍ സര്‍ക്കാരിന്റെ പുതിയ നിര്‍ദേശം

ന്യൂദല്‍ഹി: ഇറാനെതിരായ ഇസ്രഈല്‍-അമേരിക്ക യുദ്ധത്തിന്റെ അനന്തരഫലമായി ഇന്ധന ക്ഷാമം രൂക്ഷമാവുന്ന സാഹചര്യത്തില്‍...

Mahmudullah: భారత్ చేతిలో ఆ ఓటమి ఇప్పటికీ మర్చిపోలేము.. ఆటగాళ్లందరం బోరున ఏడ్చేశాం.!

Mahmudullah: 2016 టీ20 వరల్డ్‌కప్‌ లో భారత్‌ తో జరిగిన మ్యాచ్‌...