14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Kamal : 'ரூ.49 கோடி கடன், திண்டுக்கல்லில் விவசாய நிலம்..!' – கமல் சொத்து விவரங்களும், மதிப்பும்!

Date:

வரும் ஜூன் 19-ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி பதவிக்கு போட்டியிட உள்ளார்.

இதை தொடர்ந்து, அவர் நேற்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் இதோ…

என்ன படித்திருக்கிறார்?

சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவரது தொழிலை நடிப்பு என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின், கமல் ஹாசன்

சொத்து விவரங்கள்

2023 – 24 நிதியாண்டில், ரூ.78.90 கோடி வருமானம்;

அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி;

அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி;

ஆக, அவரது மொத்த சொத்தின் மதிப்பு ரூ.305.55 கோடி.

ரூ.49.67 கோடி கடன் உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இரண்டு, உத்தண்டி மற்றும் சோழிங்கநல்லூரில் தலா ஒன்று என்று நான்கு வணிகக் கட்டடடங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.111.1 கோடி.

திண்டுக்கல் வில்பட்டியில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.22.24 கோடி.

கையில் ரொக்கமாக ரூ.2.60 லட்சம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னென்ன கார்கள் வைத்துள்ளார்?

மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், BMW, லக்சஸ். இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.

2021-ம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்தப்போது…

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது அவர் குறிப்பிட்ட விவரங்கள்…

2019 – 20 நிதியாண்டில் அவரது வருமானம் ரூ.22.1 கோடி.

அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.45.09 கோடி.

அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.131.84 கோடி

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕೆಂಪೇಗೌಡ ವೃತ್ತ (ಮಣಿಪಾಲ್ ಜಂಕ್ಷನ್) ಕಾಮಗಾರಿಗಳ ಪರಿಶೀಲಿಸಿದ ಸಂಸದ ಯದುವೀರ್

 ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು–ಕೊಡಗು ಲೋಕಸಭಾ ಕ್ಷೇತ್ರದ ಸಂಸದ  ಯದುವೀರ್ ಕೃಷ್ಣದತ್ತ...

നെതര്‍ലാന്‍ഡ്‌സിലെ സിനഗോഗ് തീവെപ്പിന് പിന്നാലെ ജൂത സ്‌കൂളില്‍ സ്‌ഫോടനം; ഭീരുത്വമെന്ന് ആംസ്റ്റര്‍ഡാം മേയര്‍

ആംസ്റ്റര്‍ഡാം: ആംസ്റ്റര്‍ഡാമിലെ ജൂത സ്‌കൂളില്‍ സ്‌ഫോടനം. ശനിയാഴ്ച രാവിലെയാണ് സ്‌ഫോടനമുണ്ടായതെന്ന് റോയിട്ടേഴ്‌സ്...

“கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" – அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

Milk Purity: మీరు తాగే పాలు అసలైనవేనా? కల్తీ పాలను గుర్తించే 5 సింపుల్ పద్ధతులు ఇవే!

Milk Purity: చిన్న పిల్లల నుంచి వృద్ధుల వరకు అందరికీ అవసరమైన...