16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

Trump Gold Card: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறலாம்; நிபந்தனைகள் என்ன?

Date:

“ட்ரம்ப் கோல்ட் கார்ட், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கான 5 மில்லியன் டாலர் பாதை. இது அமெரிக்க பொருளாதாரத்தில் பங்குவகிக்க விரும்பும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமான திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் பேசியுள்ளார்.

இந்தியா – அமெரிக்கா அணுகுமுறைக் கூட்டணி மன்றம் (USISPF) தலைமைத்துவ உச்சி மாநாட்டில், பேசிய அவர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான வழிமுறைகள் மாறுவதாகவும், இனி ட்ரம்ப் கார்ட் மக்கள் அமெரிக்கா வருவதற்கான மகத்தான வாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

Howard Lutnick

ட்ரம்ப் கோல்ட் கார்டினால் என்ன லாபம்?

ட்ரம்ப்பின் கோல்ட் கார்ட் என்பது EB-5 முதலீட்டாளர் விசாவுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. EB-5 -வின் முந்தைய வழிமுறைகளை விட கோல்ட் கார்ட் மூலம் எளிதாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கும் உரிமையையும் அமெரிக்க குடியுரிமையையும் பெற முடியும்.

EB-5 முதலீட்டாளர் விசாவைப் பெற குறைந்தது 8 லட்சம் டாலர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்து, அதன் மூலம் 10 முழுநேர வேலை வாய்ப்புகளையாவது உருவாக்க வேண்டும்.

ஆனால் ட்ரம்ப் கோல்ட் கார்டில் 5 மில்லியன் டாலர்கள் (சுமார் 42 கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும். ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இதன்மூலம் வரி திட்டத்திலும் பலன்கள் கிடைக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும் வரி செலுத்தினாலே போதுமானது, அத்துடன் பரம்பரை வரி கடமைகள் எதுவும் கிடையாது.

ட்ரும்ப் கோல்ட் கார்ட்
ட்ரும்ப் கோல்ட் கார்ட்

வரவேற்பைப் பெறும் ட்ரம்ப் கோல்ட் கார்ட்

trumpcard.gov என்ற தளத்தில் ட்ரம்ப் கோல்ட் கார்டுக்காக விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியர்களை வெகுவாக ஈர்த்து, சிறந்த நபர்களை அமெரிக்காவுக்கு வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த கார்டு மத்திய கிழக்கு நாடுகளில் பேசுபொருளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 10 மில்லியன் கோல்ட் கார்டுகள் விற்கப்பட்டால் அமெரிக்காவுக்கு 50 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கும் எனப் ரம்ப். ஆனால் லுட்னிக் 2 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டால் 1 ட்ரில்லியன் டாலர் முதலீடு வந்துசேரும் என சிறிய இலக்கையே எதிர்பார்த்துப் பேசியுள்ளார்.

எழும் கேள்விகள்jg

அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ள இந்த திட்டத்துக்கு பல்வேறு சட்டரீதியான சவால்கள் எழுந்துள்ளது. டைம்ஸ் நவ் தளம் கூறுவதன்படி, குடியேற்ற நிபுணர்கள் மற்றும் சட்டக் குழுக்கள், “ஜனாதிபதி ஒருதலைபட்சமாக EB-5 திட்டத்தை மாற்றியமைக்கவோ, நீக்கவோ முடியாது, காங்கிரஸ் அதை ரத்து செய்யாவிட்டால் அல்லது ஒரு புதிய அல்லது திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றும் வரை பழைய திட்டமே செயல்பாட்டில் இருக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.” எனக் கூறியிருக்கின்றனர்.

ஏற்கெனவே உலகில் உள்ள மில்லியனர்களில் 37% பேர் அமெரிக்காவில்தான் உள்ளனர். இந்தியா குடியேற்ற முதலீடுகளை மேற்கொள்வதில் முன்னணி நாடுகளில் ஒன்று.

ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற முதலீடுகளில் நெறிமுறைகளை இறுக்கி வரும் சூழலில் அமெரிக்கா, இந்தியர்களுக்கு மறுக்க முடியாத தேர்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘ചിറയിന്‍കീഴില്‍ കോഴിക്കോട്ടുകാരി വേണ്ട’; രമ്യ ഹരിദാസിന്റെയും സണ്ണി ജോസഫിന്റെയും കോലം കത്തിച്ച് പ്രതിഷേധം

തിരുവനന്തപുരം: ചിറയിന്‍കീഴ് കോണ്‍ഗ്രസില്‍ പൊട്ടിത്തെറി. ആലത്തൂര്‍ മുന്‍ എം.പിയായ രമ്യ ഹരിദാസിനെ...

50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! – அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்...

എ. പത്മകുമാറിനെ വെട്ടി; ആറന്മുള മണ്ഡലം എല്‍.ഡി.എഫ് കണ്‍വീനര്‍ സ്ഥാനം നഷ്ടപ്പെട്ടു

പത്തനംതിട്ട: ശബരിമല സ്വര്‍ണക്കൊള്ള കേസിലെ പ്രതിയും മുന്‍ എം.എല്‍.എയും സി.പി.ഐ.എം നേതാവുമായ...