23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

Operation Sindoor: “15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' – கர்னல் சோபியா குரேஷி

Date:

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினார்.

Operation Sindoor

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் 15 இடங்களைத் தாக்க பாகிஸ்தான் இலக்கு வைத்ததாககாவும், அதை இந்திய படை முறியடித்துவிட்டதாகவும் கர்னல் சோபியா குரேஷி கூறியிருக்கிறார்.

டெல்லியில் பேசிய கர்னல் சோபியா குரேஷி, “நேற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்று தெளிவாகாகக் கூறப்பட்டது. அதேசமயம், இந்தியா மீது ஏதேனும் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மே 7-க்கும் மே 8-க்கும் இடைப்பட்ட இரவில் வந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி, பூஜ் என வட மற்றும் மேற்கு இந்தியாவில் ட்ரோன், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அது முறியடிக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் தாக்குதல் என்று நிரூபிக்கும் வகையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளிலிருந்து பாகங்கள் கிடைக்கின்றன.” என்று கூறினார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಿಎಂ  ಪತ್ರಕ್ಕೆ ಸ್ಪಂದನೆ: ಹೆಚ್ಚುವರಿ 20% ಸಿಲಿಂಡರ್  ಪೂರೈಕೆಗೆ ಕೇಂದ್ರ ಒಪ್ಪಿಗೆ – ಸಚಿವ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್, 23,2026 (www.justkannada.in): ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬರೆದ 2ನೇ ಪತ್ರಕ್ಕೆ...

യു.എസ് അധിനിവേശത്തെ പ്രതിരോധിക്കാന്‍ ക്യൂബ സജ്ജം; ലോകസാഹചര്യങ്ങള്‍ അവഗണിക്കുന്നത് നിഷ്‌കളങ്കതയെന്ന് വിദേശകാര്യമന്ത്രി

ഹവാന: അമേരിക്കയില്‍ നിന്നുള്ള ഏത് സൈനിക ആക്രമണങ്ങളെയും നേരിടാന്‍ സജ്ജമാണെന്ന് ക്യൂബ....

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! – திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

LPG crisis India: వంటగ్యాస్‌లో కొత్త మార్పు.. ఇకపై, 14.2 కేజీల సిలిండర్‌కు బదులుగా, 10 కేజీల సిలిండర్!

మధ్యప్రాచ్య సంక్షోభం, తరిగిపోయిన దేశీయ నిల్వలు, తగ్గిన దిగుమతుల కారణంగా, ప్రభుత్వ...