13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக…' – செல்வப்பெருந்தகை

Date:

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுக்தி இது’ என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தன. இஸ்லாமிய, சிறுபான்மையின அமைப்புகள் நாடுமுழுவதும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி

இந்தக் கடும் எதிர்ப்புகள் மற்றும் சிறுபான்மையினரின் போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று முதல் சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துத் தெரிவித்து வருகிறது. அவ்வகையில் ‘வக்ஃப் திருத்த மசோதா’ சட்டமாக நடைமுறைக்கு வந்திருப்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர், செல்வப்பெருந்தகை, வக்ஃபு சட்டத்திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரான கிருஸ்த்துவர்களை குறிவைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வக்ஃப் (திருத்த) மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது.

மத சுதந்திர உரிமையை மீறும் மசோதா

ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்று முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது. ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறி வைக்கும் பாஜக

ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், “இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது ? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் – ஒரு விவாதம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது. வக்ஃபு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரான கிருஸ்த்துவர்களை இதன் மூலம் குறிவைத்துள்ளது.

1930களில், ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சியினர், இதே பாணியில் முதலில் கம்யூனிஸ்டுகளையும், அடுத்ததாக தொழிற்சங்கவாதிகளையும், பின்னர் யூதர்களையும் பிடித்து அழித்தனர். அதே பாணியில் இன்று பாஜக தலைமையிலான சங் பரிவார் குழுவினர், முதலில் முஸ்லிம்களை குறி வைத்துள்ளன. அடுத்தது கிருஸ்த்துவர்களை குறிவைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது.

அன்று ஜெர்மனியில், அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. ஆனால் இன்று சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளனர். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்து வரும் இத்தகைய நாச வேலைகளை காங்கிரஸ் பேரியக்கம் முழு மூச்சாக எதிர்க்கும்.” என்று

வக்ஃப் திருத்த மசோதா பற்றிய விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்

Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikatan Whatsapp Channel



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ധനക്ഷാമമില്ല, എല്‍.പി.ജി ഉത്പാദനം 28% വര്‍ധിപ്പിച്ചു; വ്യാജപ്രചരണം വേണ്ട: ഹര്‍ദീപ് സിങ്

ന്യൂദല്‍ഹി: ഇന്ത്യയിലെ ഊര്‍ജ ഇറക്കുമതി സുരക്ഷിതമായി തുടരുകയാണെന്ന് പെട്രോളിയം മന്ത്രി ഹര്‍ദീപ്...

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில்...

Lifetime Achievement Award: ‘ది వాల్’ రాహుల్ ద్రావిడ్ కు అరుదైన గౌరవం..

Lifetime Achievement Award: భారత మాజీ క్రికెటర్, మాజీ టీమిండియా కోచ్,...